தனது ஆல் டைம் பெஸ்ட் அணியை வெளியிட்ட ஹர்பஜன் சிங். ஆனா கேப்டன் கங்குலி இல்லையாம் – யார் தெரியுமா ?

Harbhajan
- Advertisement -

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை தற்போது கடுமையாக அசச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் முற்றிலுமாக பாதிப்பை ஏற்படுத்தி இது இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் தனது ஆட்டத்தை துவங்கியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தற்போது இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1400 தாண்டியுள்ள நிலையில் இந்தியாவில் 21 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தினால் சிலர் உயிரிழந்தும் உள்ளதால் தற்போது இந்தியாவில் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

Harbhajan

- Advertisement -

கடந்த மாதம் 25 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் கிரிக்கெட் வீரர்கள் தங்களது வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். மார்ச் மாதம் 29ம் தேதி துவங்க இருந்த ஐபிஎல் தொடரும் ஏப்ரல் 15-ம் தேதியை வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று பி.சி.சி.ஐ ஏற்கனவே அறிவித்திருந்தது.

மேலும் அது மட்டுமின்றி அதனைத்தொடர்ந்து இந்த ஐபிஎல் தொடர் நடைபெறுவதில் சந்தேகம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நேரத்தில் கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஷேன் வார்ன் மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அஃப்ரிடி என பலரும் தங்களுக்கு பிடித்த சிறந்த லெவன் அணியை தேர்வு செய்து வெளியிட்டு வந்தனர்.

harbhajansingh

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் விளையாடிய காலத்தில் சிறந்த வீரர்கள் கொண்ட சிறந்த லெவன் அணியை தேர்வு செய்து தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள இந்த சர்வதேச அணியில் கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த வீரர்களை தேர்வு செய்துள்ளார். இந்த லெவன் அணியில் துவக்க வீரர்களாக வீரேந்திர சேவாக் மற்றும் மேத்யூ ஹைடன் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

ராகுல் டிராவிட் மூன்றாவது இடத்திலும், சச்சின் நான்காவது இடத்திலும், ஐந்தாவது இடத்தில் காலிஸ்ஸையும் தேர்வு செய்துள்ளார். அதனைத்தொடர்ந்து விக்கெட் கீப்பராக சங்கக்காராவை பவுலர்களாக போலக், மெக்ராத், பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் மற்றும் ஷேன் வார்ன் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள இந்த ஒருநாள் அணிக்கு கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

Ricky-Ponting

கங்குலியின் தலைமையில் பல போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்ற ஹர்பஜன் சிங் ரிக்கி பாண்டிங்கை கேப்டனாக தேர்வு செய்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஹர்பஜன் தேர்வு செய்த லெவன் அணி இதோ :

1) விரேந்திர சேவாக், 2) மாத்யூ ஹேடன், 3) ராகுல் திராவிட், 4) சச்சின், 5) காலிஸ், 6) ரிக்கி பாண்டிங், 7) குமார் சங்ககரா, 8) ஷான் போலாக், 9) ஷேன் வார்ன், 10) வாசிம் அக்ரம், 11) கிளன் மெக்ரா.

Advertisement