இவரிடம் அபாரமான திறமை இருக்கு கூடிய விரைவில் இந்திய அணியில் விளையாடுவார் – ஹர்பஜன் நம்பிக்கை

Harbhajan
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் பல ஜாம்பவான் வீரர்களை விட உள்ளூர் இளம் வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி தங்களது பெயரை பேச வைத்துக் கொண்டிருக்கிறார்கள். படிக்கல், இஷான் கிஷான், ருதுராஜ், ரவி பிஷ்நோய், வாஷிங்டன் சுந்தர், தங்கராசு நடராஜன் என பல வீரர்கள் தங்களை முழுமையாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

boult

- Advertisement -

குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் இஷான் கிஷான் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த நான்கு வருடமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் ஆடி வந்தாலும், இந்த வருடம் அவரது ஆட்டத்தில் மிகச் சிறப்பான முன்னேற்றம் தெரிகிறது.

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 99 ரன்கள் குவித்து தனது சதத்தை தவறவிட்டாலும், அதற்கு அடுத்து சில போட்டிகளில் ரோகித் சர்மா இல்லாத காரணத்தால் துவக்க வீரராக களம் இறங்கினார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 47 பந்துகளில் 72 ரன்கள் குவித்து மும்பை அணிக்கு தன்னந்தனி ஆளாக வெற்றி பெற்றுக்கொடுத்தார்.

Ishan kishan

தற்போது வரை 11 போட்டிகளில் ஆடி 395 ரன்கள் குவித்துள்ளார். தன்னுடைய ஆட்டம் இவ்வாறு மேம்பட்டதற்கு ராகுல் டிராவிட் தான் காரணம் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Ishan-kishan

இந்நிலையில் இந்திய அணியில் அடுத்த விக்கெட் கீப்பர் காண தேடல் இருக்குமேயானால் இவரது பெயரை ஒதுக்கிவிட்டு யாரையும் தேட முடியாது என்பதுபோல் பல முன்னாள் வீரர்கள் பேசி வருகின்றார். ஹர்பஜன் சிங் கூறுகையில்… விக்கெட் கீப்பருக்கான போட்டியில் இருக்கும் இஷான் கிஷான் விரைவில் இந்திய அணியில் இடம் பிடிக்க மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement