ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்த இதுதான் ஒண்ணுதான் வழி. இல்லனா அவரை தடுத்து நிறுத்துறது கஷ்டம் – ஹர்பஜன் ஓபன் டாக்

Harbhajan
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில் இதனை அடுத்து இரண்டாவது போட்டி சிட்னி நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 389 ரன்களை குவித்தது.

indvsaus

- Advertisement -

அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் சதம் அடித்தார். அவரைத்தவிர வார்னர், பின்ச், லாபுஷன் மேக்ஸ்வெல் என நால்வரும் அரைசதம் அடித்தனர். அதன் பின்னர் 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி மீண்டும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்திய அணி சார்பாக கேப்டன் கோலி 87 பந்துகளில் 89 ரன்களையும், ராகுல் 66 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 76 ரன்களை குவித்தார். பேட்டிங் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருந்தாலும் இந்த போட்டியிலும் இந்திய அணியின் மோசமான பந்து வீச்சினாலே தோல்வி கிடைத்தது.ஆட்டநாயகனாக ஸ்மித் தேர்வானார்.

smith 1

இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்மித் சதமடித்தார். இந்நிலையில் அவரது விக்கெட்டை எவ்வாறு வீழ்த்துவது என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

பொதுவாக, ஸ்டீவ் ஸ்மித் வேகப்பந்துவீச்சாளர்களை பந்துவீசினால் நன்கு விளையாட கூடியவர். அதேநேரம் பலமுறை ஸ்பின்னர்களுக்கு எதிராக திணறி இருக்கிறார். ஆகையால் சாஹல் மற்றும் குல்தீப் இருவரையும் அடுத்தடுத்து பந்துவீசச் செய்து ஸ்மித்தை ரன் அடிக்கவிடாமல் திணறடித்தால், எளிதில் விக்கெட் எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Smith

கடந்த இரண்டு போட்டிகளிலும் ஒரு முனையில் வேகப்பந்துவீச்சாளர் மற்றொரு சுழல் பந்துவீச்சாளர் என பயன்படுத்தியதால் அவர் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என நான் நினைக்கிறேன். அடுத்த போட்டியில் விராத் கோலி இதை செய்யும் பட்சத்தில் அவரை விக்கெட் வீழ்த்த முடியும்.” என அறிவுறுத்தினார்.

Advertisement