தற்போதைய உலகின் நம்பர் 1 ஸ்பின்னரான அஷ்வினுக்கு இவரே சரியான போட்டி தருகிறார் – ஹர்பஜன் ஓபன் டாக்

Ashwin-Harbhajan
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே ஸ்தம்பித்து நிற்கும் இவ்வேளையில் உலகம் முழுவதும் பலதரப்பட்ட விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்படும் உள்ளன. இந்த வகையில் இந்தியாவில் தற்போது நடைபெற இருந்த 13வது ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியானது. மேலும் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் எப்போது துவங்கும் என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.

Ashwin 1

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த ஓய்வு நேரத்தை இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு நாட்டினை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் தங்களது இந்த ஓய்வு நேரத்தை சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். மேலும் தங்களது கிரிக்கெட் குறித்த அனுபவங்களையும் அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அவ்வாறு பல இந்திய முன்னாள் வீரர்கள் உரையாடி வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், தமிழக வீரரான அஸ்வினுடன் நேரலையில் பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் இருவரும் சென்னையில் நடைபெறும் போட்டி மற்றும் தங்களுக்குள் இருக்கும் விடயங்கள் குறித்தும் அதிக அளவில் பகிர்ந்து கொண்டனர்.

Harbhajan

அந்த வகையில் ஹர்பஜன்சிங் அஸ்வினிடம் கூறுகையில் : நமக்குள் பொறாமை இருப்பதாக பல் கருத்துக்கள் வெளியாகி இருந்தன. ஆனால் அந்தக் கருத்தினை நான் ஏற்கவில்லை.என்று தெரிவித்தார். மேலும் தற்போது இருக்கும் ஆப் ஸ்பின்னர்களில் உலக அளவில் அஸ்வினே நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளர் என்று குறிப்பிட்டுள்ளார் ஹர்பஜன்.

- Advertisement -

மேலும் அவர் இன்னும் சில ஆண்டுகள் காயம் அடையாமல் தொடர்ந்து விளையாடினால் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். மேலும் எப்பொழுதும் தனக்கு அஸ்வின் மீது எந்தவித பொறாமையும், மோதலும் வந்ததே இல்லை என்றும் சென்னையில் விளையாடுவதை தான் விரும்புவதாகவும் அந்த லைவில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Lyon

மேலும் தற்போதைய கிரிக்கெட்டில் அஷ்வினுக்கு சரியான போட்டியாளராக ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் திகழ்கிறார். அவர் வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பாக பந்துவீசி வருகிறார். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் லயன் சிறப்பாக பந்துவீசி வருகிறார். என்னை பொறுத்தவரை அஷ்வினுக்கு சமமாக அவரே செயல்பட்டு வருகிறார். அஷ்வினுக்கும் லயனுக்குமே தற்போது போட்டி நடைபெற்று வருகிறது என்றும் ஹர்பஜன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement