- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இன்னைக்கு விராட் கோலி அடிப்பாரு.. இந்தியா ஜெயிக்க அந்த ஆஸி வீரரை சீக்கிரம் அவுட்டாக்கனும்.. ஹர்பஜன் பேட்டி

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் செயின்ட் லூசியா நகரில் ஜூன் 24ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் சூப்பர் 8 போட்டி நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் வென்றால் தான் செமி ஃபைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற கட்டாயத்திற்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டுள்ளது. எனவே 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஃபைனல் போல இந்தியாவை தோற்கடிக்கும் முனைப்புடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

மறுபுறம் செமி ஃபைனல் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ள இந்தியா கடந்த வருடம் ஐசிசி தொடர்களில் கொடுத்த தோல்விக்கு பதிலடியாக இம்முறை ஆஸ்திரேலியாவை வெளியேற்ற வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இந்நிலையில் நியூயார்க்கை விட வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் விராட் கோலி நன்றாக பேட்டிங் செய்வதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஹர்பஜன் நம்பிக்கை:
எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தப் போட்டியில் விராட் கோலி கண்டிப்பாக பெரிய ரன்கள் அடிப்பார் என்று ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு வந்தது முதலே பந்து விராட் கோலி பேட்டின் நடுப்பகுதியில் சந்தித்து வருகிறது”

“இதுவரை பெரிய ஸ்கோர் அடிக்காவிட்டாலும் அவர் அடிக்கும் 20, 30 ரன்களே டி20 கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே ஒருமுறை செட்டாகி விட்டால் விராட் கோலி பெரிய ரன்கள் அடிப்பார். அது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரும் என்று நம்புவோம்” எனக் கூறினார். அதே நிகழ்ச்சியில் மற்றொரு முன்னாள் இந்திய வீரர் தீப்தாஸ் குப்தாவும் பேசினார்.

- Advertisement -

அப்போது 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் சதமடித்த டிராவிஸ் ஹெட்டை இம்முறை இந்தியா விரைவில் அவுட்டாக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டிராவிஸ் ஹெட் இந்தியாவுக்கு ஏற்கனவே நிறைய தொல்லையை கொடுத்துள்ளார். ஆரம்ப காலங்களில் அவர் ஆஃப் சைட் திசையில் மட்டுமே அதிகமாக அடிப்பார்”

இதையும் படிங்க: கஷ்டம் தான்.. இந்தியாவை ஆஸி தோற்கடிச்சுட்டா அதை யாராலும் நிறுத்த முடியாது.. கவாஜா வெளிப்படை

“ஆனால் தற்போது அவர் தனது பேட்டிங்கில் ஆன் சைட் திசையில் நிறைய ஷாட்டுகளை இணைத்துள்ளார். எனவே முன்னோக்கி வந்து அடிக்க முடியாத அளவுக்கு இந்தியா அவருக்கு எதிராக ஸ்டம்ப் லைனில் வீச வேண்டும். அதன் பின் ஆஃப் ஸ்டம்ப்பின் மேல்பகுதியில் அல்லது மிடில் ஸ்டம்பில் அடிக்க முயற்சிக்க வேண்டும். அவரை முன்னங்காலில் அதிகமாக வந்து அடிக்க வைக்க முயற்சித்து அவுட்டாக்க வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -