அந்த 2 பேரையும் ஒன்னா சேர்த்தா.. அவர் நாட்டுக்காக உ.கோ ஜெயிச்சு கொடுப்பாரு.. ஹர்பஜன் கோரிக்கை

Harbhajan Singh
- Advertisement -

ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த வருடம் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது அந்த அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பாண்டியா பேட்டிங், பவுலிங் ஆகிய எதிலுமே தாக்கத்தை ஏற்படுத்தாமல் சுமாராக செயல்பட்டு தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

அத்துடன் மும்பை ரசிகர்களே அவரை தங்களுடைய கேப்டனாக ஏற்றுக் கொள்ளாமல் கடைசி வரை எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சூரியகுமார் யாதவ், பும்ரா உள்ளிட்ட மும்பை வீரர்களே பாண்டியாவுக்கு ஆதரவாக இல்லை என்று செய்திகள் வெளியாகின. சொல்லப்போனால் பாண்டியாவை தங்களுடைய கேப்டனாக மும்பை வீரர்களே ஏற்றுக் கொள்ளவில்லை என்று இர்பான் பதான் தொடரின் முடிவில் விமர்சித்தார்.

- Advertisement -

ஹர்பஜன் கோரிக்கை:
மேலும் ஒற்றுமையின்றி ஒன்றாக சேர்ந்து விளையாடாததே மும்பையின் தோல்விக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஐபிஎல் விட 2024 டி02 உலகக் கோப்பை முக்கியம் என்பதால் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து விளையாட அணி நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டுமென ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் சுமாரான ஃபார்மில் இருந்தாலும் இந்தியாவுக்காக உலகக் கோப்பையில் பாண்டியா அசத்துவார் என்றும் ஹர்பஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நீல ஜெர்சியை அணியும் போது ஹர்திக் பாண்டியா வித்தியாசமானவராக செயல்படுவார். ஏனெனில் அவரால் விக்கெட்டுகள் எடுத்து முக்கிய ரன்களை அடிக்க முடியும் என்பது நமக்குத் தெரியும். சமீபத்தில் நிறைய கடினமான சூழ்நிலைகளை கடந்த அவர் இந்தியாவுக்காக அந்தத் தொடரில் நன்றாக விளையாட வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்”

- Advertisement -

“ஒருவேளை அவருக்கு இது நல்ல தொடராக அமைந்தால் இந்தியாவும் வெற்றியை நோக்கி செல்வதற்கான வாய்ப்பு உருவாகும். ஆம் தற்போது அவருடைய ஃபார்ம் கொஞ்சம் கவலைக்குரியதாக இருக்கிறது. குஜராத் அணியிலிருந்து மும்பை அணிக்கு நகர்ந்த அவரைச் சுற்றி நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இம்முறை மும்பை அணி ஒன்றாக விளையாடியது போல் தெரியவில்லை. கடந்த 2 மாதங்களாக ஹர்திக் பாண்டியா சுதந்திரமான மனிதராக செயல்படவில்லை”

இதையும் படிங்க: ஹார்டிக் பாண்டியா விடயத்தில் நடப்பது எல்லாமே ஒரு நாடகம் தான்.. புட்டு புட்டு வைத்த – வடஇந்திய யூடியூபர்

“ரோஹித் மற்றும் பாண்டியா போல ஐபிஎல் அணிகளில் விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் நாட்டுக்காக ஒன்றாக சேர்ந்து இந்த உலகக் கோப்பையில் ஸ்பெஷலான செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் ஐபிஎல் தொடரை விட உலகக்கோப்பை மிகவும் பெரியது. எனவே அனைத்து வீரர்களையும் ஒன்றாக சேர்த்து விளையாட வைக்க முயற்சி செய்யுங்கள் என்று நான் அணி நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன். ஒருவேளை தோற்றாலும் அனைவரும் சேர்ந்து தோற்கட்டும்” என்று கூறினார்.

Advertisement