இப்போதாவது வாயைத் திறந்து பேசுங்க.! ரவி சாஸ்திரியை விலாசிய சுழற்பந்து வீச்சாளர்.!

இந்திய அணியின் தொடர்தோல்வியை அடுத்து இந்திய அணி மீதும் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மீதும் நிறைய விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. விராட் கோலி மீது விமர்சனம் எழ வாய்ப்பில்லை அவர் சிறப்பாகவே இதுவரை செயல்பட்டு வருகிறார். அவரை தவிர மற்ற எந்த பேட்ஸ்மனும் சரியாக விளையாடவில்லை என்பது உண்மை. இந்நிலையில் அணியின் பயிற்சியாளர் மீது இப்போது அனைவரும் கவனத்தை திருப்பி உள்ளனர். அவரை கேள்வி கேட்க துவங்கி உள்ளனர்.

har

குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ரவி சாஸ்திரியை கடுமையாக சாடியுள்ளார். இங்கிலாந்து தொடருக்கு கிளம்பும் முன்பாக ரவி அளித்த பெட்டியில் இந்திய அணி எந்த சூழ்நிலையிலும் எந்த பிட்ச் ஆகா இருந்தாலும் வெற்றி பெரும் என்று கூறியிருந்தார். இதனை குறிவைத்து கேள்வி எழுப்பிய ஹர்பஜன் இப்பொது என்ன சொல்லப்போகிறீர்கள் ரவி என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இப்போது ஒத்துக்கொள்ளுங்கள் காலத்தின் தன்மை மற்றும் வானிலை போன்றவைகள் ஆட்டத்தின் போக்கை மாற்றும் என்று கடிந்துள்ளார். மேலும் இந்திய அணி எதிர் அணிக்கு சவால் கொடுக்காமலே சரணடைந்தது என்று தான் கூறவேண்டும். மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளத்தில் எப்படி 2 சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்திர்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

har sas

இதுபோன்ற வெளிநாட்டு தொடர்களை ஆடும் போது தொடக்க ஜோடி சிறப்பாக இருக்க வேண்டும் . இம்முறை தொடக்க ஆட்டக்காரர்களை நிலையாக வைத்திருக்காமல் ஏன் அடிக்கடி மாற்றுகிறீர்கள் இதனால் நடு வரிசை ஆட்டக்காரர்களும் திறம்பட செயல்படமல் போவதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -