இன்று பிறந்தநாள் காணும் மனிஷ் பாண்டே வைத்திருக்கும் அற்புத சாதனை பற்றி தெரியுமா ? – விவரம் இதோ

Pandey

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மனிஷ் பாண்டே இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான மணீஷ் பாண்டே விராட் கோலி தலைமையிலான அண்டர் 19 அணியில் விளையாடியவர் என்பதும் 2009 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற அண்டர் 19 உலககோப்பையில் இந்திய அணிக்காக பங்கேற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

pandey

அதன் பிறகு அவர் இந்திய அணிக்காக தேர்வில் சற்று தாமதம் ஏற்பட்டது. 2015ஆம் ஆண்டு இறுதியாக அவர் இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஜூலை 14ஆம் தேதி அறிமுகமானார். அதை ஆண்டு டி20 போட்டிகளில் மனிஷ் பாண்டே அறிமுகமானார். ஆனால் அணியில் இன்றும் அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

இதுவரை 23 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 440 ரன்களும், 31 டி20 போட்டிகளில் விளையாடி 565 ரன்களும் மணிஷ் பாண்டே குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச போட்டிகளில் சிறப்பாக ஆடவில்லை என்றாலும் உள்ளூர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை மணிஷ் பண்டே வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக அவர் வைத்திருக்கும் பெரிய சாதனை யாதெனில் :

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் 2009ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகின்றன. ஐபிஎல் தொடரில் இந்திய வீரராக முதல் சதம் அடித்தவர் என்ற பெருமையை மனிஷ் பாண்டே வைத்துள்ளார் . 2009 ஆம் ஆண்டு அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடும் பொழுது சதத்தை அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இன்று வரை ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தாலும் இந்திய அணியில் ஏனோ நிரந்தமாக இடம்பிடிக்க முடியவில்லை.