துவக்க வீரராக களமிறங்க நான் தயார். நான் இறங்கட்டுமா ? – இளம் வீரர் அதிரடி பேச்சு

Vihari
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது துவங்க உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான பயிற்சி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி 21 ஆம் தேதி துவங்க உள்ளது.

ind 1

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா ஏற்கனவே காயம் காரணமாக விலகி உள்ளார். எனவே மாயங்க் அகர்வால் உடன் யார் துவக்க வீரராக களமிறங்க போகிறார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்நிலையில் ப்ரித்வி ஷா மற்றும் சுபமான் கில் ஆகியோரில் யார் இறங்க போகிறார்கள் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி வீரர்கள் ப்ரித்வி ஷா மற்றும் கில் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினர். ஆனால் மிடில் வீரரான விஹாரி சதம் அடித்து ரிட்டயர்டு ஹர்ட் ஆகி வெளியேறினார். மேலும் தனது பேட்டிங் ஆர்டர் குறித்து பேசிய விஹாரி கூறுகையில் :

ஒரு பேட்ஸ்மேனாக எந்த பேட்டிங் ஆர்டரிலும் இறங்கி ஆட நான் தயாராக இருக்கிறேன். இதுவரை எனது பேட்டிங் ஆர்டர் குறித்து அணி நிர்வாகம் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் அணி நிர்வாகம் என்னை எந்த இடத்தில் இறங்க சொன்னாலும் இறங்கி ஆடுவேன் என்று விஹாரி தெரிவித்துள்ளார்.

Advertisement