வேற எதனா சூப்பர் மெஷின் வச்சிருக்கீங்களா ? பி.சி.சி.ஐயும் மைதான நிர்வாகத்தையும் சேர்த்து கலாய்த்த ரசிகர்கள் – விவரம் இதோ

Ind-1

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று கௌஹாத்தி மைதானத்தில் நடைபெற இருந்தது. இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில் டாஸ் போடப்பட்டது. டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ind vs sl

அதன்படி இலங்கை அணி களமிறங்க தயாராகியது. ஆனால் அப்போது திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. மழை மேலும் அதிகரித்த காரணத்தினால் போட்டி நடைபெற சாத்தியம் இல்லை என்று தெரியவரவே ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி. கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்த தொடரின் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் மீதமுள்ள இரு போட்டிகளில் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலைமை இப்போது இரு அணிகளுக்கும் வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று போட்டி மழையினால் பாதிக்கப்பட்ட பிறகு ஓவர்கள் குறைத்து போட்டி நடைபெறும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். மைதான ஊழியர்கள் மைதானத்தில் இருந்த நீரை அகற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அகற்றியும் மைதானம் ஈரமாக இருந்தது. இதனை அடுத்து வேக்கம் க்ளீனர் வைத்து சில இடங்கள் காய வைக்கப்பட்டு வந்தது. ஆனால் அதிலும் பயன் கிடைக்கவில்லை.

ind

அடுத்தது தலை முடியை காய வைக்கும் ஹேர் டிரையர், அயன் பாக்ஸ் போன்றவற்றை எடுத்து வந்து ஆடுகளத்தை காய வைக்க முயற்சி செய்தனர் ஊழியர்கள். இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் இதைவிட நவீன மிஷின் உங்களிடம் ஏதும் இல்லையா ? பணக்கார கிரிக்கெட் நிர்வாகத்தில் ஒன்றான பிசிசிஐ இப்படியா நடந்து கொள்வது ? வேற எந்த புது மெஷின் இல்லையா ? நாங்கள் அதையாவது பார்க்கிறோம் என்றும் மைதான நிர்வாகத்தையும் கலாய்த்தபடி ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

- Advertisement -

ind 2

இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.