சச்சின் தேடிய அந்த சென்னை நபர் இவர் தான் – வைரலாகும் புகைப்படம்

Sachin

நேற்று சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவு ஒன்று ரசிகர்களால் தமிழகம் முழுவதும் தீயாக பரவியது. அதற்கு காரணம் சச்சின் தான் ஒரு முறை சென்னையில் டெஸ்ட் போட்டிக்கு விளையாட வந்தபோது தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கி இருந்தாராம். அப்போது அவரை சந்தித்த அந்த ஓட்டல் ஊழியர் கொடுத்த ஆலோசனை அவருக்கு உதவியதாம்.

sachin1

டீ கொடுக்கும்போது சச்சினிடம் பேச ஆரம்பித்த ஊழியர் உங்களுடைய எல்போ கார்டு என்கிற முழங்கை உபகரணம் இருப்பது உங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உகந்ததாக இல்லை என அவர் தெரிவித்துள்ளார். அந்த ஊழியர் தந்த ஆலோசனை சச்சினுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்ததாம் இதனை சச்சின் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த விடயத்தை அப்படியே தமிழில் தெளிவாக பதித்து அந்த ஊழியரை சந்திக்க ஆவலாக இருப்பதாகவும் அவரை கண்டுபிடித்து தருமாறு ட்விட்டரில் சச்சின் தமிழ் பாட்டு ரசிகர்களுக்கு தனது அன்பான வேண்டுகோளை விடுத்திருந்தார்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கருக்கு ஆலோசனை வழங்கிய அந்த ஓட்டல் ஊழியர் சென்னை பெரம்பூரை சேர்ந்த குருபிரசாத் என தெரியவந்துள்ளது. மேலும் சச்சின் பதிவிட்ட இந்த பதிவு அதிக அளவு தமிழ் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டதால் அவருக்கு இந்த விடயம் எட்டியுள்ளது. இந்நிலையில் சச்சின் தன்னை காண ஆர்வமாக உள்ளதை அறிந்த குருபிரசாத் அந்த விடயம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

Guru

அதன்படி சச்சினை தான் டெஸ்ட் போட்டியில் விளையாட வந்த போது தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் பார்த்ததும் அவரை சந்தித்து அவரிடம் சில நேரம் பேசியதும் என் வாழ்வில் மறக்க முடியாத தருணம். அவரை நேரில் பார்த்ததே என் வாழ்வில் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று குருபிரசாத் தெரிவித்தார்.