தோனியை முதல்முறையாக பார்க்கும் போதே அவரது இந்த திறமையால் நான் திகைத்துபோனேன் – கிரேக் சேப்பல் பூரிப்பு

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி துவங்க இருந்த ஐபிஎல் தொடரும் இருமுறை தள்ளி வைக்கப்பட்டு தற்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்க இத்தொடர் நடைபெற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இருப்பினும் ஐ.பி.எல் தொடரை நடத்தாமல் விட்டால் பெரும் இழப்பு ஏற்படும் என்கிற காரணத்தால் ஏதாவது ஒரு வழியில் இந்த தொடரை நடத்தியே தீர வேண்டும் என்று பி.சி.சி.ஐ திட்டமிட்டு வருகிறது.

Dhoni

இந்த ஐபிஎல் தொடர் இந்திய அணியின் முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனிக்கு ஒரு முக்கிய தொடராக பார்க்கப்பட்டது. ஏனெனில் இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் இடம்பிடிக்க இந்த ஐபிஎல் தொடரில் தன் திறனை வெளிப்படுத்த வேண்டும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார். மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் தோனி இனி அணிக்கு திரும்புவது கடினம் என்று நேரடியாக தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி கடந்த 10 மாதங்களாக இந்திய அணியில் விளையாடாமல் இருக்கும் தோனி மீண்டும் அணியில் இடம் பிடிக்க மாட்டார் என்றும் அதன் காரணமாகவே அவர் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்ட தாக்கும் சிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் தோனி தனது ஓய்வு குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் ஐபிஎல் தொடரில் தன் திறமையை நிரூபிப்பதற்காக மார்ச் மாதம் இரண்டாம் தேதி சென்னையில் துவக்கம் பயிற்சியைத் தொடங்கினார். ஆனால் எதிர்பாராதவிதமாக கொரோனா வைரஸ் காரணமாக அவர் மீண்டும் ராஞ்சிக்கு திரும்பினார்.

Chappell 1

இந்த ஐபிஎல் தொடரில் எப்படியாவது சிறப்பாக விளையாடி மீண்டும் இந்திய அணியில் தோனி விளையாடுவதைப் பார்க்க ஆக இருந்த ரசிகர்களுக்கும் இது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் இருந்து ஒதுங்கி இருக்கும் தோனி குறித்து நிறைய செய்திகள் தினந்தோறும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தோனி நேரடியாக எந்தவிதத் செய்திகளிலும், பேட்டிகளிலும் இடம்பெறுவதில்லை.

- Advertisement -

அவர் குறித்து பலரும் பல கருத்துக்களையும், அவருடன் இருந்த அனுபவங்களையும் கூறிவரும் நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனுமான கிரேக் சாப்பல் தோனி குறித்து ஒரு அனுபவத்தை பேஸ்புக் நேரலையில் பகிர்ந்துள்ளார். அதன்படி கிரேக் சாப்பல் தோனி குறித்து கூறியதாவது : தோனியின் பேட்டிங்கை முதல் முறை நான் கண்ட போது திகைத்துப் போனேன்.

Dhoni 2

அத்துடன் அப்போதைய காலத்தில் இப்படி ஒரு திறமையான பேட்ஸ்மென் இந்திய அணிக்கு கிடைத்துவிட்டார் என்று தான் நினைத்தாகவும் அவர் கூறினார். ஏனெனில் தோனி விளையாட ஆரம்பித்த காலத்தில் அவரைப் போன்ற ஒரு பவர்புல் ஹிட்டர் இந்திய அணிக்கு கிடைப்பது மிகவும் சிறப்பான ஒரு விஷயமாகும். இதனால் பலம் வாய்ந்த ஒரு வீரர் இந்திய அணிக்கு கிடைத்ததாக கருதினேன். அத்துடன் இலங்கை அணிக்கு எதிராக அவர் விளையாடிய அதிரடி இன்னும் என் நினைவில் இருக்கிறது.

Chappell

அவர் அடித்த அந்த 183 ரன்கள் ஒரு அருமையான பேட்டிங். மேலும் அந்த அதிரடியை கிரிக்கெட் உலகம் நிச்சயம் மறக்காது. முதல் முறை அவரது பேட்டிங்கை கண்ட போதே நான் திகைத்து நின்றேன். எனக்கு அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு அப்போதே வந்துவிட்டது. சரியான பந்துகளை அவர் சரியான திசைகள் எல்லாம் பார்த்து அடிப்பதில்லை. ஆனால் பலமாக அடித்தார் நான் கண்டவரை இந்தியனின் பவர்ஃபுல் ஹிட்டர் தோனிதான் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.