இந்திய அணி இன்னைக்கு டாப்ல இருக்குறதுக்கு டிராவிட் தான் காரணம் – புகழ்ந்து தள்ளிய சேப்பல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் பேட்ஸ்மேனான கிரேக் சாப்பல், சமீபத்தில் ஆஸ்திரேலியா நாட்டின் கிரிக்கெட் இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்பேட்டியில் பேசிய அவர் , நாங்கள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்காக என்ன செய்து வந்தோமோ அதை அப்படியே இந்திய கிரிக்கெட் அணிக்காக ராகுல் டிராவிட் செய்து வருகிறார் என்று பேட்டியளித்துள்ளார். அப்பேட்டியில் பேசிய அவர்,

Dravid

ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் அணியும் இளம் வீரர்களை உருவாக்குவதில் மிகுந்த அக்கறை காட்டி வருகின்றன. அதன்படி பார்த்தால் தற்போது அதிகமான திறமை வாய்ந்த இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதில் இந்தியாதான் முன்னனியில் இருக்கிறது. இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ராகுல் ட்ரவிட்தான், அந்த அணியின் இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்கிறார். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், எங்களுடைய நாட்டில் இளம் வீரர்களை உருவாக்க நாங்கள் எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தோமோ, ராகுல் ட்ராவிட் அதை அப்படியே இந்தியாவில் செயல்படுத்தி பல திறமையான இளம் வீரர்களை உருவாக்கி இருக்கிறாரென்று அந்த போட்டியில் அவர் கூறியிருக்கிறார். மேலும் பேசிய அவர்,

- Advertisement -

இளம் வீரர்களை உருவாக்குவதில் முன்னியில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் தான் இருந்து வந்தன. ஆனால் தற்போது அது எல்லாம் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் திறமையான வீரர்களை உருவாக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். கடந்த சில வருடங்களாக இந்த விஷயத்தில் இங்கிலாந்து மிக சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. ஆனால் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளை ஒப்பிட்டு பார்த்தால், அதில் இந்தியாவே சிறந்த இளம் வீரர்களை உருவாக்கி இருக்கிறது என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

rahul-dravid

அதேசமயம் இப்பேட்டியில் கடந்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்த இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு, அத்தொடரை இந்தியா கைப்பற்ற உதவியதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணிக்காக பல திறமையான இந்திய வீரர்கள் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி வருகின்றனர். அறிமுகமான புதிதிலேயே அவர்கள் தங்கள் திறமைகளையும் நிரூபித்துக் காட்டுகின்றனர். இப்படி திறமையான இளம் வீரர்களை உருவாக்கியதில் ராகுல் ட்ராவிட்டின் பங்கு அளப்பறியது என்று சொன்னால் அது மிகையாகாது.

- Advertisement -

ஏனெனில் இன்று இந்திய அணிக்காக அறிமுகமாகி மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களான, ப்ரித்வி ஷா, ரிஷப் பன்ட, சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் அனைவரும் ராகுல் ட்ராவிட்டின் பயிற்சியில் வளர்ந்தவர்கள் தான். தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கும் ட்ராவிட், இதற்கு முன்பு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியளராக இருந்தார். ட்ராவிட் பயிற்சியாளராக இருந்த இந்திய இளம் அணி 2016ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டம் வரை சென்று தோல்வியை தழுவினாலும், 2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement