சஹாரின் கிரிக்கெட் வாழ்க்கையை கிளோஸ் பண்ண பார்த்த கிரெக் சாப்பல்..! கதைய கேளுங்க..! – காரணம் இதுதான்..?

- Advertisement -

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் , 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த பும்ரா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக இளம் வீரர் தீபக் சஹர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தீபக் சஹர் இந்திய அணியில் இடம்பெற கடந்து வந்த பாதை குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

chahar

- Advertisement -

இந்திய முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் முக நூல் பக்கத்தில் “ஆகாஷ்வாணி” என்ற நிகழ்ச்சியில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இந்திய இளம் வீரர் தீபக் சஹர் முன்னாள் இந்திய பயிற்சியாளர் கிரேக் சாப்பெலால் சந்தித்த ஒரு வேதனையான சம்பவம் குறித்து கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில் “சாஹர்-இன் கதை மிகவும் ஆச்சரியமானது. அவர் இளம் வயதில் ராஜஸ்தானில் உள்ள ஹனுமன்கர் நகரில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டார். அப்போது, ராஜஸ்தான் கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராக இருந்த ஆஸ்திரேலியாவின் கிரெக் சாப்பலை சந்தித்த போது,சாஹர் ஒரு கிரிக்கெட் வீரராகவே வர முடியாது என்று அவரை தாழ்த்தி எடைபோட்டார்” என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.

greig

தனது பனிரெண்டு வயதிலிருந்து கிரிக்கெட் ஆடி வருகிறார் தீபக் சாஹர். மேலும், சிறு வயது முதலே இவரது தந்தை உறுதுணையாக இருந்துள்ளார். தனது மகனிற்காக தான் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு லோன் வாங்கி தனது மகனின் கிரிக்கெட் பயற்சிக்கு பணம் செலுத்தினாராம். அதற்கு பரிசாக தற்போது சஹருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் கூறலாம்.

Advertisement