இந்திய அணிக்கு எதிராக நாங்கள் பெரும் வெற்றிதான் உண்மையில் பெரியது – முன்னாள் இங்கி வீரர்

Swann
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சிறப்பாக விளையாடி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. டி20 தொடரை விட டெஸ்ட் தொடரை இந்திய அணி பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தது.

IND-1

- Advertisement -

ஆனால் இந்திய அணி வெறித்தனமான கம்பேக் கொடுத்து 2 – 1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இதனால் இந்திய வீரர்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் என அனைவரும் மாபெரும் அளவில் கொண்டாடி வருகின்றனர். ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்த இந்திய அணி அடுத்தாக பிப்ரவரியில் இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் என மிகப்பெரிய தொடரில் விளையாட உள்ளது. இதில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 5ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மார்ச் 12ம் தேதி அகமதாபாத் மைதானத்திலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 23ம் தேதி புனே மைதானத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

INDvsENG

தற்போது முதலில் நடைபெறயிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுயிருக்கிறது. இதில் இரு அணிகளிலும் பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரீம் ஸ்வான் இந்திய அணியை வெல்வது எங்களது அடுத்த இலக்கு என்று கூறியிருக்கிறார்.

England

இதுகுறித்து கிரீம் ஸ்வான் “ஆஷஸ் தொடரை எதிர்பார்த்து இருந்ததில் இருந்து நாங்கள் மாற வேண்டும். ஆஸ்திரேலிய அணியை ஆஸ்திரேலிய மண்ணில் வென்ற இந்திய அணியை இந்திய மண்ணில் வீழ்த்துவது தான் மிகப்பெரிய விஷயமாக கருதப்படும் என்று நான் நினைக்கிறேன். இங்கிலாந்து அணி 2012ஆம் ஆண்டு இந்திய மண்ணில் தொடரை வென்ற பின் மிகப்பெரிய அணியாக இருக்கிறது. இங்கிலாந்து அணியில் திறமையான சுழற்பந்து வீச்சாளர்களும் கெவின் பீட்டர்சன் போன்ற பேட்ஸ்மேன்களும் தேவை” என்றிருக்கிறார் கிரீம் ஸ்வான்.

Advertisement