அவரோட டேலண்ட்க்கு இது சின்ன சேம்பிள் தான். இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளரை புகழ்ந்த ஸ்வான் – விவரம் இதோ

Swann
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்சை தற்போது முடிந்துள்ளது. முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்களும், லாரன்ஸ் 46 ரன்களை குவித்தனர்.

cup

- Advertisement -

இந்திய அணி சார்பாக அக்சர் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 12 ஓவர்களின் முடிவில் 24 ரன்களை குவிந்திருந்தது. ரோஹித் 8 ரன்களுடனும், புஜாரா 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தற்போது இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பின்னர் நேற்றைய ஆட்டம் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துகளை அளித்து வந்தனர். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான கிரீம் ஸ்வான் இந்திய இளம் வீரரை பாராட்டி தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இங்கிலாந்து அணி டாஸ் வென்றதும் இஷாந்த் சர்மா நிச்சயமாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு தொந்தரவு கொடுப்பார் என்று நினைத்தேன்.

siraj

ஆனால் இளம் வீரரான சிராஜ் அதைச் செய்தது எதிர்பாராத ஒன்று. அதுவும் ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்த அவர் தீட்டிய திட்டம் எல்லாம் வேற லெவல். அதேபோல பேர்ஸ்டோ விக்கெட்டை கைப்பற்றிய அவரது டெலிவரியும் அற்புதமான ஒன்றாகும். அவரிடம் அபாரமான திறமை உள்ளது. அந்த திறமையில் இது ஒரு சின்ன சாம்பிள் தான். இந்த 2 விக்கெட்டுகளும் LBW முறையில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Siraj

நேற்றைய போட்டியிலும் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தாலும் முகமது சிராஜின் பந்துவீச்சை பலரும் புகழ்ந்து வருகின்றனர். ஏனெனில் அவரது இந்த பந்துவீச்சில் வேகம், சுவிங் என இரண்டும் இருந்தது. குறிப்பாக ரூட் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோரை அவர் சிறப்பாக வீழ்த்தியிருந்தார். அனுபவ வீரரான இஷாந்த் சர்மாவே விக்கெட் வீழ்த்தாத நிலையில் இந்த போட்டியில் சிராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது பலரின் பாராட்டுகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement