அஷ்வினுக்கு எதிராக நல்லா ஆடனும்னா இவரை பாலோ பண்ணுங்க – இங்கி வீரர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ஸ்வான்

Swann
- Advertisement -

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மிக நீண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதற்காக தற்போது சென்னைக்கு வந்து இருக்கிறது இங்கிலாந்து அணி சென்னையில்தான் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறப் போகின்றன. பிப்ரவரி 5ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியிருக்கிறது. இந்நிலையில் மிகச் சிறந்த அணியாக மாறிக் கொண்டிருக்கும் இந்திய அணியை எவ்வாறு சமாளிப்பது என்று இங்கிலாந்திற்கு அதன் முன்னாள் வீரர்கள் ஆலோசனை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

குறிப்பாக இந்தியாவில் ஆடும்போது மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு பெரிதும் கைகொடுக்கும் அது மட்டுமில்லாது அஷ்வின் போன்ற ஒரு ஜாம்பவானின் சுழற்பந்து வீச்சை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவரது சொந்த ஊரான சென்னையில் அவரை எப்படி சமாளிப்பது என்றும் முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் கிரேம் ஸ்வான் இங்கிலாந்து அணிக்கு ஆலோசனை கொடுத்திருக்கிறார். அவர் கூறுகையில்…

ரவிச்சந்திரன் அஸ்வின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர். அவரை எதிர் கொண்டு விளையாட வேண்டும் என்றால் ஜோ ரூட் தான் சிறந்த வீரர். சுழற்பந்து வீச்சை மிகத் திறமையாக விளையாடுவார். அவரை காப்பி செய்து மற்ற இங்கிலாந்து வீரர்கள் விளையாட வேண்டும். அவர்தான் இங்கிலாந்து அணியின் துருப்பு சீட்டாக இருக்கப் போகிறார். மற்றவர்கள் அதைக் கூர்ந்து கவனித்து விளையாடுங்கள்.

Ashwin-3

ஷாட் செலக்ட் செய்வதில் அவர் மிகச்சிறந்த கெட்டிக்காரர். அதே நேரத்தில் சென்னை ஆடுகளத்தை பொருத்தவரை முதல் மூன்று நாட்களுக்கு பேட்டிங்கை கொடுக்கும் இந்திய அணியில் ரவிந்திர ஜடேஜா இல்லை. அவர் இல்லை என்றாலும் இங்கிலாந்து அணியை வீழ்த்துவது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அவ்வளவு பெரிய காரியம் இல்லை. இதுதான் உண்மை. இதனை புரிந்து இங்கிலாந்து வீரர்கள் சரியாக விளையாட வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார் கிரேம் ஸ்வான்.

root 1

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 5 ஆம் தேதி துவங்கவுள்ளது இதற்காக இரு அணி வீரர்கள் சென்னை வந்து தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு பயிற்சிக்காக தயாராகி வருகின்றனர்.

Advertisement