பிராட்மேன் பிறந்த நாள் முன்னிட்டு கவுரவப்படுத்திய கூகுள்.!

கிரிக்கெட் உலகின் பிதாமகனாக கருதப்படும் டான் ப்ராட்மேனுக்கு இன்று 110ஆவது பிறந்ததினம் கொண்டாடப்படுகிறது. இவர் 1908ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி பிறந்தார். கிரிக்கெட் உலகில் இவரது சாதனைகள் சொல்ல முடியாத அளவிற்கு கொட்டி கிடக்கின்றன. சாதனைகளின் நாயகனான ப்ராட்மேன் அந்த கால கிரிக்கெட்டில் கொடி கட்டி பறந்தவர்.

1928 ஆம் ஆண்டு தனது டெஸ்ட் வாழ்க்கையை துவங்கிய இவர் மொத்தம் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 20 வருடம் கிரிக்கெட் விளையாடிய இவர் 1948 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 6996 ரன்களை இவர் அடித்துள்ளார். இதில் 29 சதங்கள் மற்றும் 13 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 334 ரன்களை அவர் அடித்துள்ளார்.

don

இவருடைய பிறந்த நாளை கவுரவிக்கும் விதமாக கூகுள் இன்று அவருடைய புகைப்படத்தை கூகுள் பக்கத்தின் முகப்பில் “Doodle” ஆக வைத்து இவரை சிறப்பித்துள்ளது.

இன்று வரை அல்ல எப்போதுமே எவராலும் தொடமுடியாத ஒரு சாதனையை அவர் வசம் வைத்துள்ளார். என்னவென்றால், அவருடைய டெஸ்ட் சராசரி 99.94 இந்த சராசரியை இன்று வரை எவராலும் கிட்டகூட நெருங்க முடியவில்லை. இங்கிலாந்துடன் தனது கிரிக்கெட் பயணத்தை துவங்கிய இவர் இங்கிலாந்துடனே தன் பயணத்தை முடித்து கொண்டார்.

dons

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனுக்கு உதாரணம் என்றாலே நம் மனதிற்கு முதலில் வருவது ப்ராட்மேன் பெயர் தான். இவர் இறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் சச்சினை சந்தித்தார். அப்போது சச்சினிடம் உன்னுடைய பேட்டிங்கை பார்க்கும் போது நான் விளையாடியதை போன்றே உள்ளது. சச்சினுக்கு ப்ராட்மேன் புகழாரம் சூட்டினார்.