டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் : விராட் கோலி நிச்சயம் தடுமாறுவாரு. அதுக்கு காரணம் இருக்கு – கிளென் டர்னர் ஓபன்டாக்

Glenn-Turner
- Advertisement -

ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி சவுத்தாம்ப்டன் நகரில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் வருகிற 18-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை முதல் முறையாக எந்த அணி கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டி குறித்தான முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் தகவல்கள் தற்போது அதிகளவில் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகின்றன.

INDvsNZ

- Advertisement -

அந்த வகையில் தற்போது நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான கிளென் டர்னர் தனியார் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நிச்சயம் இந்த இறுதிப் போட்டியில் தடுமாறுவார் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தின் வேகம் குறைந்து விட்டதாக கூறவில்லை. அதேபோன்று அவர் நன்றாக விளையாட மாட்டார் என்றும் யூகமாக சொல்லவில்லை.

இருப்பினும் இந்த ஏஜஸ் பவுல் மைதானத்தின் சீதோஷ்ன நிலை ஸ்விங் மற்றும் சீம் பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்தால் நிச்சயம் விராட்கோலி திணற வேண்டிய நிலை ஏற்படும். ஏனெனில் போட்டியின்போது சீதோஷ்ன நிலை மிக முக்கிய பங்கு வகிக்கும் .உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துவது போல் வெளிநாட்டு மைதானங்களில் ஆதிக்கம் செலுத்த முடியாது. கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் இந்திய அணிக்கு ஏற்றார்போல் ஆடுகளங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

kohli 1

ஆனால் வெளிநாட்டு மைதானங்களில் அதுபோன்ற நிலை கிடையாது. கடந்த முறை நியூசிலாந்து சென்ற போது இந்திய அணி கேப்டன் விராட்கோலி எவ்வாறு தடுமாறினாரோ அதேபோன்று ஸ்விங் மற்றும் சீம் ஆகியவற்றிற்கு ஒத்துழைக்கும் இந்த மைதானத்தின் தன்மை காரணமாக விராத் கோலி நிச்சயம் தடுமாறுவார் என்று கிளென் டர்னர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு துவக்கத்தில் இந்திய அணி நியூசிலாந்து சென்றிருக்கும் போது 2 க்கு 0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியிடம் தொடரை இழந்தது.

Kohli

நம்பர் ஒன் அணியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் திகழ்ந்து வரும் இந்திய அணி அந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து நான்கு இன்னிங்ஸ்களில் விளையாடி ஒரு இன்னிங்ஸில் மட்டுமே 200 ரன்களுக்கு மேல் அடித்தது. கோலி 2 டெஸ்ட் போட்டிகளில் 4 இன்னிங்ஸ்களில் சேர்த்து 41 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். அதனால் நிச்சயம் இம்முறை ஜேமிசன், சவுதி, டிரென்ட் போல்ட் ஆகிய மூவருக்கும் எதிரே விளையாடுவது கடும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement