அந்த 2 வெற்றியால் நல்ல ஃபார்மில் இருக்கோம்.. துபாயில் இந்தியாவை வீழ்த்துவோம்.. கிளன் பிலிப்ஸ்

Glenn Phillips
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் கடைசி லீக் போட்டி மார்ச் இரண்டாம் தேதி நடைபெறுகிறது. துபாயில் நடைபெறும் அந்தப் போட்டியில் விளையாடும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளன. எனவே இந்தப் போட்டியில் 2 அணிகளும் தங்களுடைய பலத்தை சோதித்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் முனைப்புடன் விளையாட உள்ளன.

முன்னதாக துபாயில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகத்தை கொடுப்பதாக நிறைய விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அதைப்பற்றி விமர்சிப்பதில் எதுவுமில்லை என்று நியூசிலாந்து வீரர் கிளன் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் 3 – 0 என்ற கணக்கில் சமீபத்தில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் வீழ்த்திய நியூசிலாந்து அணி பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் கோப்பையை வென்றது.

- Advertisement -

ஃபார்மில் இருக்கோம்:

அதனால் நல்ல ஃபார்மில் இருக்கும் தங்களால் இந்தியாவை தோற்கடிக்க முடியும் என்று பிலிப்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக இந்தியா வலுவான அணி. ஆனால் நாங்கள் தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இங்கே வந்துள்ளோம். சில மாதங்களுக்கு முன்பாக கிடைத்த வெற்றியை விட தற்சமயத்தில் இருக்கும் ஃபார்ம் எங்களுக்கு அதிகப்படியான தன்னம்பிக்கையை கொடுக்கிறது”

“இருப்பினும் நாங்கள் கடினமாக உழைத்து நன்றாக வேலை செய்து வருவதால் இந்தியாவை மீண்டும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். பாகிஸ்தானில் விளையாடியதில் அழகு என்னவெனில் அங்கு ஒவ்வொரு போட்டியிலும் வித்தியாசமான பிட்ச் இருந்தன. அங்கு விளையாடியது துபாயில் விளையாடுவதற்கு தேவையான நல்ல தயாராகும் முறைகளை எங்களுக்குக் கொடுத்தது”

- Advertisement -

இந்தியாவை வீழ்த்துவோம்:

“இங்கே பிட்ச் வித்தியாசமாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும். எனவே அதில் விரைவாக எங்களை உட்படுத்திக் கொண்டு பெருமையுடன் விளையாட முயற்சிப்போம். அதற்காக இங்கே கண்டிப்பாக வெல்வோம் என்று முட்டாள்தனமாக நாங்கள் இருக்கப் போவதில்லை. அதே சமயம் அடிப்படைகளைப் பூர்த்தி செய்துள்ளதால் எங்களால் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறோம்”

இதையும் படிங்க: செமி ஃபைனலில் தெ.ஆ விட ஆஸியுடன் மோதுவதையே இந்தியா விரும்பும்.. 2 காரணம் இது தான்.. கவாஸ்கர் பேட்டி

“துபாயில் விளையாடுவதால் இந்தியாவுக்கு என்ன பயன்? என்பனவற்றில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. இது போன்ற உலகத் தொடர்களில் சாக்கு சொல்வதற்கான மனநிலையுடன் நாங்கள் வருவதில்லை. எங்களுக்கு கிடைக்கும் விஷயங்களில் நாங்கள் புகார் செய்யப் போவதில்லை. எங்களுக்கு கிடைக்கும் விஷயங்களை வைத்து நன்றாக செயல்பட முயற்சிப்போம்” என்று கூறினார்.

Advertisement