பும்ரா மாதிரியே இந்திய அணிக்கு இன்னொரு தரமான பவுலர் கிடைத்துவிட்டார் – மெக்ராத் ஓபன் டாக்

Mcgrath
- Advertisement -

சேலத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன் ஐபிஎல் தொடரின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்து விட்டார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியவர். அந்த அணி விளையாடிய 16 போட்டிகளிலும் விளையாடி 16 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். மேலும் விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், மகேந்திர சிங் தோனி போன்ற ஜாம்பவான்களின் விக்கெட்டுகளை சாய்த்தார். அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக யார்க்கர் வீசும் அவரது திறன் அவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது. அதுமட்டுமின்றி அவரது அடையாளமும் அதுவாகவே மாறியது.

nattu 1

- Advertisement -

இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் இவருக்கு ஆஸ்திரேலிய சென்ற இந்திய அணியில் பேக்அப் பவுலராக இந்திய அணியில் இடம் கொடுத்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை, மேலும் மாற்றுவீரராக மூன்றாவது ஒருநாள் போட்டியில் இடம் பிடித்து ஆடிய இவர் 2 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.

அதனால் தான் சர்வதேச டி20 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமானார். தனது முதல் போட்டியிலேயே பல சாதனைகளைப் படைத்த நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதுக்கு அடுத்த போட்டியிலும் பட்டையை கிளப்பினார் நடராஜன். மற்ற அனைத்து இந்திய பந்து வீச்சாளர்களும் 4 ஓவருக்கு 40 ரன்களுக்கு மேலாக கொடுக்க இந்த வேலையில் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெறும் 20 ரன்கள் தான் கொடுத்திருந்தார்.

nattu 1

இந்நிலையில் இதுபோன்ற பந்துவீச்சை இந்திய வீரர்கள் தற்போது வரை பார்த்ததில்லை. இதனால் மெய் சிலிர்த்துப் போய் அவரை பாராட்டி வருகிறார்கள். மேலும் பந்துவீச்சின் ஜாம்பவானாக இருக்கும் கிளன் மெக்ராத் நடராஜனை பாராட்டி இருக்கிறார். அவர் கூறுகையில் “இந்த சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு ஒரு திறமையான இந்திய பந்து வீச்சாளரை கொடுத்திருக்கிறது. நடராஜனின் பந்துவீச்சு என்னை மிகவும் ஈர்த்துவிட்டது.

அவர் மிகத் திறமையான வீரர். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மூலம் ஒரு திறமையான பந்து வீச்சாளர் இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறார். 2016ஆம் ஆண்டு ஜஸ்பிரித் பும்ரா எப்படி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அறிமுகமாகி தற்போது மிகச் சிறந்த பந்துவீச்சாளராக இருக்கிறாரோ அப்படி 2020ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தில் தற்போது நடராஜன் கிடைத்துள்ளார்” என்று கூறியிருக்கிறார் கிளன் மெக்ராத்.

Advertisement