ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்க உள்ளது. அந்தத் தொடரில் இந்திய அணிக்காக விராட் கோலி சிறப்பாக செயல்படுவாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் நம்பிக்கை நட்சத்திரமான அவர் சமீப காலங்களில் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.
குறிப்பாக சமீபத்திய நியூசிலாந்து தொடரில் சொந்த மண்ணிலேயே சுமாராக விளையாடிய அவர் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அந்தத் தொடரில் சந்தித்த தோல்வியால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகளை வென்றதாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. அதனால் ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற இம்முறை விராட் கோலி சிறப்பாக விளையாட வேண்டியதும் அவசியமாகிறது.
அட்டாக் பண்ணுங்க:
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வி இந்தியாவுக்கும் விராட் கோலிக்கும் பெரிய அழுத்தத்தை கொடுத்திருக்கும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் கிளன் மெக்ராத் தெரிவித்துள்ளார். எனவே அந்த அழுத்தத்தை பயன்படுத்தி விராட் கோலிக்கு எதிராக ஆஸ்திரேலிய பவுலர்கள் அட்டாக் செய்தால் இந்தியாவை எளிதாக வீழ்த்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக ஸ்லெட்ஜிங் செய்து விராட் கோலியின் உணர்வுகள் விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “3 – 0 என்ற கணக்கில் நியூசிலாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வியால் உங்கள் மீது நிறைய அழுத்தம் இருக்கும். எனவே அந்த அழுத்தத்தை இந்தியா மீது போட்டுப் பாருங்கள். அதையும் தாண்டி அவர்கள் வருகிறார்களா என்பதை பாருங்கள்”
ஆஸியின் திட்டம்:
“விராட் கோலிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியினர் மிகவும் கடினமாக அழுத்தத்தை போட முயற்சிக்க வேண்டும். அதனால் அவர் தன்னுடைய உணர்வுகளுடன் சண்டையிட்டு களத்தில் சில வாக்குவாதங்களை செய்தால் விராட் கோலி சரியாக கூடும் என்பதை யார் அறிவார். எப்படி இருந்தாலும் விராட் கோலி கொஞ்சம் அழுத்தத்தின் கீழ் இருப்பார். ஒருவேளை தொடரின் துவக்கத்திலேயே சில குறைவான ஸ்கோர் எடுத்தால் விராட் கோலி இன்னும் அதிகப்படியான அழுத்தத்தை உணர்வார்”
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து சுப்மன் கில் விலகல் – என்ன நடந்தது?
“விராட் கோலி கொஞ்சம் உணர்வுபூர்வமான வீரர். அதைத் தாண்டி மேலே வரும் போது அவர் இன்னும் மேலே வருவார் கீழே செல்லும் போது கொஞ்சம் தடுமாறுவார்” என்று கூறினார். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு சவாலை கொடுத்து இந்தியாவின் வெற்றிக்காக போராட விராட் கோலி தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.



