
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் கடைசி போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 2 – 1* (5) என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருப்பதால் 5வது போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலையில் இந்தியா விளையாடி வருகிறது.
அப்படிப்பட்ட நிலையில் ஐசிசி தர வரிசையில் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக ஜொலிக்கும் ஜஸ்ப்ரித் பும்ரா கடைசிப் போட்டியில் விளையாடாமல் விலகியுள்ளார். வித்தியாசமான பவுலிங் ஆக்சனை கொண்ட அவர் நீண்ட நேரம் பவுலிங் செய்தால் முதுகுப் பகுதியில் காயத்தைச் சந்திக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளார். சொல்லப்போனால் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் மற்ற பவுலர்கள் தடுமாற்றமாக பவுலிங் செய்தார்கள்.
அதன் காரணமாக இந்தியாவை வெற்றி பெற வைப்பதற்காக பும்ரா அனைத்து போட்டிகளிலும் முழுமூச்சுடன் பவுலிங் செய்தார். அதனாலேயே கடைசிப் போட்டியில் காயத்தை சந்தித்த அவர் மீண்டும் குணமடைந்து விளையாடி வருகிறார். எனவே மீண்டும் காயத்தை சந்திக்கக் கூடாது என்பதற்காக இங்கிலாந்து தொடரில் அவர் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று ஆரம்பத்திலேயே அறிவிக்கப்பட்டது.
அதன் படி 1, 3, 4வது போட்டிகளில் விளையாடிய அவர் கடைசிப் போட்டியிலிருந்து விலகினார். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற தனித்துவமான தரமான பவுலரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட நேரம் பவுலிங் செய்து முழுமையாக விளையாட முடியாதது அவமானமான விஷயம் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளன் மெக்ராத் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“நீங்கள் உங்களுடைய சிறந்த பவுலர் அனைத்து நேரமும் பவுலிங் செய்வதை விரும்புவீர்கள். ஒருவேளை அவர் குறைந்த நேரம் மட்டுமே பவுலிங் செய்தால், எதிரணிகள் அவருடைய 3 – 4 ஓவர்களை சமாளித்து தப்பித்து விடுவார்கள். எனவே மற்ற பவுலர்களும் அசத்த வேண்டும். உங்களுக்கு சமநிலையைக் கொடுக்க மற்றொரு வேகப்பந்து வீச்சாளர்கள் குழுவை வைத்திருக்க வேண்டும்”
இதையும் படிங்க: 5 போட்டிகள் 18 விக்கெட்ஸ்.. என்ன மனுஷன்யா.. இங்கிலாந்து ஜாம்பவானுக்காக சிராஜ் மட்டுமே செய்த நெகிழ்ச்சி செயல்
“அப்போது தான் உங்களுடைய சிறந்த பவுலர் நீண்ட நேரம் பௌலிங் செய்ய வேண்டிய நிலை வராது. பணிச்சுமையையும் சமநிலையுடன் எடுத்துச் செல்ல முடியும். அந்த வகையில் பும்ராவை பாருங்கள், அவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தமக்குத் தாமே வரம்புகளை உருவாக்க வேண்டிய நிலையில் இருப்பது அவமானதாகும். அதே சமயம் தமக்கு உகந்த வகையில் அவர் வேலை செய்ய வேண்டும்” என்று கூறினார்.