நான் பும்ராவின் பெரிய ரசிகன்.. அவர் இல்லனா ஆஸி இந்த தொடரே வேற மாதிரி இருக்கும்.. கிளன் மெக்ராத்

Glenn McGrath
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. அதன் காரணமாக 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது.

மேலும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா நழுவ விட்டுள்ளது. அதன் காரணமாக தனி ஒருவனாக போராடும் ஜஸ்ப்ரித் பும்ராவுக்காக இந்திய ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்றே சொல்லலாம். ஏனெனில் முதல் போட்டியில் கேப்டனாக எட்டு விக்கெட்டுகள் எடுத்த அவர் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

தனி ஒருவன் பும்ரா:

அதற்கடுத்த போட்டிகளிலும் அபாரமாக பந்து வீசும் அவர் ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டு இதுவரை 30* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற உலக சாதனை அவர் படைத்துள்ளார். இருப்பினும் விராட் கோலி, ரோஹித் போன்ற மற்ற வீரர்கள் சொதப்புவதால் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் இத்தொடரை 3 – 0 என்ற கணக்கில் ஒருதலைபட்சமாக ஆஸ்திரேலியா வென்றிருக்கும் என முன்னாள் வீரர் கிளன் மெக்ராத் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியில் அவர் மிகப்பெரிய பங்காக இருக்கிறார். அவர் இல்லாமல் இருந்திருந்தால் இந்த தொடர் ஒருதலைபட்சமாக இருந்திருக்கும்”

- Advertisement -

பும்ராவின் ரசிகன்:

“அவர் செய்யும் விசயங்கள் ஸ்பெஷலானது. சிறந்த இளம் வீரரான அவர் சூழ்நிலைகளுக்கு உட்படுத்திக் கொள்ளும் வழியை கண்டறிந்துள்ளார். கடைசி இரண்டு அடிகளில் அவர் அற்புதமான பவருடன் பந்து வீசுகிறார். அவரது பவுலிங் ஆப்ஷனில் கொஞ்சம் மிகை நீட்டிப்பு இருக்கிறது. அது என்னிடமும் இருந்தது. அதை பிடித்துக் கொள்ளும் அவர் இருபுறங்களிலும் நல்ல கட்டுப்பாட்டை கொண்டுள்ளார்”

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய மண்ணிலும் என்னோட சிஷ்யன் அசத்த இதுதான் காரணம் – ஜெய்ஸ்வாலின் பயிற்சியாளர் பகிர்வு

“அதை அவர் நன்றாகவும் நிர்வாகிக்கிறார். நான் ஜஸ்ப்ரித் பும்ராவின் மிகப்பெரிய ரசிகன்” என்று கூறினார். அவர் கூறுவது போல பும்ரா முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருது வெல்லாமல் போயிருந்தால் 3 – 0 என்ற கணக்கில் இந்நேரம் இந்தியா இந்த தொடரில் தோல்வியை சந்தித்திருக்கும். அந்தளவுக்கு அவர் இந்தியாவை தனி ஒருவனாக இத்தொடரில் தாங்கிப் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement