வீடியோ : வேடிக்கையாக காயமடைந்த கிளென் மேக்ஸ்வேல், ரசிகர்கள் சோகம் – குணமடைய இத்தனை மாதங்கள் ஆகுமா?

Glenn Maxwell Injury
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறி கோப்பையை தக்க வைக்கும் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது. குறிப்பாக முதல் போட்டியிலேயே நியூசிலாந்துக்கு எதிராக 89 ரன்கள் வித்தியாசத்தில் சந்தித்த படுதோல்வி கடைசியில் 7 புள்ளிகளை பெற்றும் ரன் ரேட் அடிப்படையில் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பை தகர்த்தது. அத்துடன் டேவிட் வார்னர், மிட்சேல் ஸ்டார்க் உள்ளிட்ட நம்பிக்கை நட்சத்திர வீரர்கள் சொதப்பலாக செயல்பட்டதும் தோல்வியை பரிசளித்தது.

மொத்தத்தில் தரமான வீரர்கள் இருந்தும் சுமாரான செயல்பாடுகளால் சொந்த மண்ணில் கோப்பை தக்க வைக்க தவறிய ஆஸ்திரேலிய அணி வழக்கம் போல நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இருப்பினும் உலக கோப்பைக்கு அடுத்தபடியாக சொந்த மண்ணில் மீண்டும் வலுவான இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது. அந்தத் தொடரில் சமீபத்தில் ஓய்வு பெற்ற ஆரோன் பின்ச்க்கு பதிலாக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு வேகப்பந்து வீச்சாளரான பட் கமின்ஸ் புதிய கேப்டனாக செயல்பட உள்ளார். அவரது தலைமையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக இன்னும் ஓரிரு நாட்களில் இணையும் ஆஸ்திரேலிய அணியினர் வலைப்பயிற்சிகளை துவக்க உள்ளனர்.

- Advertisement -

வேடிக்கையான காயம்:
ஆனால் அந்த தொடரிலிருந்து கடைசி நேரத்தில் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் காயத்திலிருந்து வெளியேறியுள்ளது இப்போதே ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த உலக கோப்பையில் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் சுமாராக செயல்பட்டாலும் இந்த தொடரில் பங்கேற்பதற்காக மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருந்த அவர் உலக கோப்பைக்கு பின் குடும்பத்தினருடன் நேரத்தை கழிப்பதற்காக தன்னுடைய வீட்டிற்கு சென்றுள்ளார். குறிப்பாக நவம்பர் 12ஆம் தேதியான நேற்று தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரது பிறந்தநாள் விழாவில் பங்கேற்றதாக தெரிகிறது.

அப்போது ஆடி பாடி கொண்டாடிய அவரும் அவருடைய நண்பரும் துரதிஷ்டவசமாக கீழே விழுந்து அடிபட்டதாக தெரிகிறது. அதில் அவரது நண்பர் கிளன் மேக்ஸ்வெல்க்கு மேலே விழுந்ததால் பெரிய காயத்திலிருந்து தப்பியுள்ளார். ஆனால் கீழே விழுந்ததால் அவரை விட அதிகப்படியான காயத்துக்குள்ளான கிளன் மேக்ஸ்வெல் தன்னுடைய இடது காலை உடைத்துக் கொள்ளும் அளவுக்கு படுகாயத்தை சந்தித்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அப்படி களத்திற்கு வெளியே தேவையின்றி வேடிக்கையான காயத்தை சந்தித்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

- Advertisement -

ஆனால் அது குணமடைவதற்கு குறைந்தது 3 மாதங்கள் தேவைப்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் வேறு வழியின்றி அவருக்கு பதிலாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மற்றொரு வீரர் சீன் அபௌட் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி அறிவித்துள்ளார். மேலும் தங்களுடைய முக்கிய வீரரான மேக்ஸ்வெல் விரைவில் குணமடைவதை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மொத்தத்தில் வேடிக்கையான காயத்தை சந்தித்து கடைசி நேரத்தில் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளது ஆஸ்திரேலிய ரசிகர்களுடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் சோகத்திலும் சுகத்தை போல் தாம் நலமாக இருப்பதாக தெரிவிக்கும் கிளன் மேக்ஸ்வெல் தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று வரும் மகளிர் பிக்பேஷ் தொடரை மருத்துவமனையில் படுத்துக்கொண்டே பார்த்து வருவதால் விரைவில் குணமடைவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். எது எப்படி இருந்தாலும் காயம் குணமடைய இன்னும் 3 மாதங்கள் தேவைப்படும் என்பதால் அடுத்ததாக வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் தான் அவர் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement