
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டான கிளென் மேக்ஸ்வெல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 149 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 3990 ரன்களையும், 77 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
அதுமட்டுமின்றி கடந்து 2015 மற்றும் 2023 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலககோப்பையை கைப்பற்றிய வென்ற அணியிலும் அவர் இடம்பெற்று விளையாடியுள்ளார். அதிரடி ஆட்டத்திற்கு பெயர்பெற்ற மேக்ஸ்வெல் 33 ரன்கள் சராசரியுடனும், 126 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் கிட்டத்தட்ட 4000 ரன்களை குவித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக 2003 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையின் போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 201 ரன்கள் அடித்தது அவரது சிறந்த ஆட்டமாக அமைந்தது. பகுதிநேர சுழற்பந்து வீச்சாளராகவும் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ள மேக்ஸ்வெல் 77 விக்கெட்டுகளை கைப்பற்றியது மட்டுமின்றி 91 கேட்ச்களையும் பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் தற்போது தனது 36-வது வயதில் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதற்கு காரணம் யாதெனில் :
அடுத்ததாக 2026-இல் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிகிறது. பொதுவாகவே கிரிக்கெட் வீரர்கள் தங்களது கடைசி கட்ட கரியரை நெருங்கும்போது பணிச்சுமை காரணமாக எதாவது ஒருவகையான போட்டிகளில் ஓய்வை அறிவிப்பது வழக்கம்.
இதையும் படிங்க : சோகத்தில் மனமுடைந்து தரையில் அமர்ந்த ஹார்டிக் பாண்டியா.. நெகிழ்வைத்த ஸ்டாய்னிஸ் – என்ன நடந்தது?
அந்தவகையில் தான் கிளென் மேக்ஸ்வெல்லும் இந்த முடிவை கையிலெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளிலும் இந்த ஆண்டு அவரது செயல்பாடு மிகவும் மோசமாக அமைந்திருந்தது.