இந்திய அணி முதல் டெஸ்டில் தோக்க இவரே முதன்மையான காரணம் – கில்க்ரிஸ்ட் ஓபன்டாக்

Gilchrist
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 244 ரன்கள் குவித்தது. அதேபோன்று ஆஸ்திரேலிய அணியும் 191 ரன்களுக்குள் சுருட்டியது. இதனால் 53 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 36 ரன்களுக்கு சுருண்டது.

Ind

- Advertisement -

இதனால் 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி அடித்த மிகக்குறைந்த டெஸ்ட் ஸ்கோராக இந்த ரன்கள் பதிவாகியுள்ளது. முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்சின் போது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்திய அணியின் இந்த மோசமான தோல்விக்கு இரண்டாவது இன்னிங்சில் பேட்ஸ்மேன்கள் விளையாடிய மோசமான ஆட்டமே காரணம் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நிர்வாகம் மிகப்பெரிய நம்பிக்கை வைத்து துவக்க வீரராக ப்ரித்வி ஷா பெரும் விமர்சனத்துக்கு இடையே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து நான்கு ரன்கள் மட்டும் அடித்து இரண்டு முறையும் கிளீன் போல்டாகி வெளியேறினார்.

Shaw

இதனால் அவரது இடம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வர தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான கில்க்ரிஸ்ட் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ப்ரித்வி ஷா துவக்க வீரராக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இந்திய அணி நெருக்கடிக்கு உள்ளானதற்கு அவரே முதன்மையான காரணம்.

Shaw-1

பேட்டுக்கும், பேடிற்கும் இடையே இருந்த அதிக அளவு இடைவெளியை அவர் காண்பிக்கிறார் அதன் காரணமாகவே அவர் இரண்டு இன்னிங்சிலும் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். தேர்வாளர்கள் வைத்த நம்பிக்கையை அவர் காப்பாற்றவில்லை என்று தோன்றுகிறது. இதனால் அடுத்த போட்டிகளுக்கு மற்றவர்களுக்கு வாய்ப்பு தேடி செல்லும் நிலையை அவர் ஏற்படுத்தி உள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement