உங்களுடன் விளையாடியது எப்படி இருந்தது தெரியுமா ? தோனியுடனான நினைவை பகிர்ந்த கில்கிறிஸ்ட்

- Advertisement -

தோனி ஆடிய காலத்தில் ஒரு சாதாரண வீரராக இருந்ததில்லை. எப்போதும் அவரது திறமைகள் மிகப் பெரிய ஜாம்பவான் வீரர்களுடன் ஒப்பிடப்பட்டு பேசப்பட்டு வந்தது. பேட்டிங்கை எடுத்துக்கொண்டால் அவர் மிகச்சிறந்த அதிரடி ஆட்டக்காரர் மைக்கேல் பெவன் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் உடன் இவர் ஒப்பிடபட்டார். தலைமைப் பண்பு, கேப்டன்சி எடுத்துக் கொண்டால் ரிக்கி பாண்டிங் உடன் ஒப்பிடபட்டார்.

அதேபோல் விக்கெட் கீப்பிங் எடுத்துக்கொண்டால் தோனி தனியாக தனது பாணியிலேயே விக்கெட் கீப்பிங் செய்து பல சாதனைகள் படைத்தார். இதன் காரணமாக அவர் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் குமார் சங்ககாரா போன்ற வீரர்களுடன் ஒப்பிடபட்டார். 16 ஆண்டுகாலம் விளையாடிவிட்டு தற்போது தனது 39 வயதில் ஓய்வினை எளிமையாக தனது முடிவினை அறிவித்திருந்தார்.

- Advertisement -

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய வீரர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு வீரர்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் தோனிக்கு தனது வாழ்த்துக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எப்போதும் தோனிக்கு எதிராக விளையாடியது இனிமையாகவே இருந்தது. உங்களது பாணியிலேயே அமைதியாகவும் சுறுசுறுப்பாகவும் உங்களது ஓய்வினை அறிவித்து விட்டீர்கள். இதுதான் தோனியின் வழி. இத்தனை சாதனைகளுக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் தோனி என்று அறிவித்திருந்தார் ஆடம் கில்கிறிஸ்ட்.

தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்கும் போது ஆடம் கில்கிறிஸ்ட் டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்து அவருக்கு எதிராக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement