என்னையா வெயிட் பண்ண சொன்னீங்க. நான் அணிக்கு தேர்வாவதை உங்களால தடுக்கமுடியாது – இளம் வீரர் அதிரடி

Prasad
- Advertisement -

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி தற்போது ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

gill

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிவரும் இளம் வீரரான கில் தேர்வாகவில்லை. இதுகுறித்து தேர்வுக் குழுவின் தலைவரான பிரசாத் கில் குறித்து கூறியதாவது : அவருக்கு இன்னும் வயது இருக்கிறது அவர் பொறுமையாக இருக்கவேண்டும். நிச்சயம் அவர் அணிக்கு தேர்வாக வாய்ப்பு உள்ளது என்று கூறி அவரின் இடத்தை பறித்தார்.

- Advertisement -

ஆனால் அதற்கு பதிலடி தரும் விதமாக தற்போது வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் இந்திய ஏ அணி சார்பாக டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இரட்டை சதம் (204) அடித்து வரலாற்று சாதனை படைத்தார். இதன் மூலம் அவர் தேர்வு குழு தலைவர் பிரசாத்துக்கு தனது திறமை மூலம் பதில் அளித்துள்ளார்.

இதனை கண்ட இந்திய ரசிகர்கள் ட்விட்டரில் தேர்வுக் குழு தலைவரை வெகு விமர்சையாக வசைபாடி வருகின்றனர். குறிப்பாக கில்லை வெயிட் பண்ண சொன்ன நீங்க அவருக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கல ? நன்றாக விளையாடாத ஜாதவ்க்கு வாய்ப்பு கொடுப்பீங்க ஆனா இளம் வீரர் சாதிக்கும் வீரரான இவரை விளையாட விடமாட்டீங்க ? எது என நியாயம் என்பது போல அவரை நேரடியாக தாக்கி கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement