இவ்வளவு சிறப்பாக விளையாடியும் எனக்கு வாய்ப்பில்லையா ? – கலங்கும் இளம் வீரர்

Kohli

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று மும்பையில் அறிவிக்கப்பட்டது. இதில் இம்முறை ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்றுக்கும் தனித்தனி அணி அறிவிக்கப்பட்டது.

Jadeja

இதில் மூன்று வடிவ தொடருக்கும் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் நிறைய எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த ஐயர் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள். டெஸ்ட் தொடரில் சிலரும் ஒருநாள் டி20 தொடரில் சிலரும் அறிமுக போட்டிகளுக்கான வாய்ப்பை பெற்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இல்லம் வீரரான கில் இந்த தொடரில் தான் இடம்பெறாதது குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்தார். அண்டர் 19 போட்டியில் சிறப்பாக விளையாடிய கில் தொடர்ந்து ஐ.பி.எல் மற்றும் இந்தியா ஏ அணிகளுக்காக சிறப்பாக விளையாடி வந்தார். தற்போது நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான தொடரில் தொடர் நாயகன் விருதினையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gill

தொடர்ந்து இவ்வளவு சிறப்பாக விளையாடியும் தனக்கு வாய்ப்பு கிடைக்காததை நினைத்து தற்போது கலக்கத்திலும், வருத்தத்தில் கில் உள்ளார். இதுதொடர்பாக கருத்து கூறிய நிர்வாகம் மற்ற வீரர்களுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் கில் அணிக்கு நிச்சயம் தேர்வு செய்யப்படுவார் என்று கூறியுள்ளது.

- Advertisement -
Advertisement