ஒரு ரூபாய் கூட இல்லாம முழு பணத்தையும் கொடுங்க. சுப்மான் கில்லுக்கு தண்டனை விதித்து அதிரடி – விவரம் இதோ

Gill
- Advertisement -

இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் தற்போது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். கடந்த வாரம் மொஹாலியில் டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணிக்காக பங்கேற்று விளையாடினார்.

Gill 2

- Advertisement -

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பஞ்சாப் அணி வீரரான கில் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் கேட்ச் செய்ததால் நடுவர் அவுட் என்று அறிவித்தார். ஆனால் பந்து பேட்டில் படவில்லை தான் அவுட் கிடையாது என்று நடுவரிடம் வாக்குவாதம் செய்து விட்டு கில் வெளியேற மறுத்தார். அதன்பிறகு அம்பயர் லெக் அம்பயரிடம் ஆலோசித்து கில் அவுட் இல்லை என்று அறிவித்தார்.

அம்பயரின் இந்த முடிவினால் அதிர்ச்சி அடைந்த டெல்லி அணி வீரர்கள் போட்டியை பாதியில் நிறுத்தி வெளியேற முயற்சித்தனர். இதனால் 10 நிமிடம் வரை ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்திய அணியில் இடம் பிடித்து வரும் கில் இதுபோன்று நடுவரை எதிர்த்து அவமதிக்கும் விதமாக நடந்து கொள்வது பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணையும் அவருக்கு எதிராக நடைபெற்றது.

Gill 1

அதன்பிறகு விசாரணையின் முடிவில் நடுவர் ரங்கநாதன் கில் போட்டி கட்டணத்தில் முழு தொகையையும் அதாவது 100 சதவீத போட்டி கட்டணத்தையும் அபராதமாக செலுத்தவேண்டும் என்று தண்டனை விதித்து அதிரடி காட்டினார். மேலும் அந்த போட்டியின் உத்வேகத்தை குலைக்கும் வகையில் நடந்து கொண்ட டெல்லி அணி வீரருக்கும் போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement