பண்ட் தவிர மேலும் இருவருக்கும் ஆடும் லெவனில் வாய்ப்பு இல்லையா ? – அப்போ அவங்களும் வேஸ்ட் தானா ?

dhoni with pant
- Advertisement -

வரும் 12ம் தேதி தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் கொல்கத்தா, தர்மசாலா மற்றும் லக்னோ ஆகிய மைதானங்களில் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இளம் வீரர்கள் சிலர் இடம்பெற்றுள்ளனர்.

Ind

- Advertisement -

இருந்தாலும் இந்திய அணியின் காம்பினேஷன் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். ஏனென்றால் ஏற்கனவே இந்திய அணி நியூசிலாந்தில் தோற்றுவிட்டது. இதற்காக விராட் கோலி புதிதாக சில உத்திகளைக் கையாள வேண்டியுள்ளது. இந்த அணியில் ஏற்கனவே காயத்திலிருந்து புவனேஸ்வர் குமார், ஷிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் மீண்டும் அணிக்குள் வந்துள்ளனர்.

இதன் காரணமாக ஒரு சில வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. துவக்க வீரர்களாக இளம் வீரரான பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இறங்க பெரிய வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் அதிரடி வீரரான கேஎல் ராகுல் கீப்பிங் பணியை செய்வதுடன் 5வது இடத்தில் களமிறக்கவே அணி நிர்வாகம் ஆசை காட்டும்.

மூன்றாவதாக விராட் கோலியும் நான்காவது இடத்தில் கண்டிப்பாக ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்குவார். 5வது இடத்தில் கேஎல் ராகுல், ஆறாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா தங்களது சரியான இடத்தை நிரப்புவார்கள். பந்துவீச்சை பொறுத்தவரை இந்திய சுழற்பந்து வீச்சு ஆடுகளங்களில் குல்தீப் யாதவ் மற்றும் சாஹால் ஆகியோர் கண்டிப்பாக ஆடும் லெவனில் இடம் பிடிப்பார்கள்.

- Advertisement -

அவரை தொடர்ந்து பேட்டிங் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கண்டிப்பாக அணியில் இடம் பிடிப்பார். ஹர்திக் பாண்டியாவிற்கு பிறகு அவர்தான் அணியில் பேட்டிங் செய்ய இருக்கிறார்.வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் இடம்பெறுவார்கள். இப்படி 5 சரியான பேட்ஸ்மென்கள் 2 ஆல் ரவுண்டர்கள் 2 சுழற்பந்து வீச்சாளர்கள் 2 வேகப்பந்து வீச்சாளர்கள் என இந்திய அணி கனகச்சிதமாக களம் இறங்குவதையே விரும்பும் .

gill 1

இதன்காரணமாக சுப்மன் கில், ரிஷப் பண்ட் மற்றும் நவதீப் சைனி ஆகியோருக்கு அணியில் இடம் கிடைப்பது சந்தேகம் தான். முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டால் மட்டுமே இந்திய அணி இந்த மூவரையும் அணியில் சேர்ப்பது பற்றி யோசிக்கும்.

Advertisement