தோனி உங்களிடம் எனக்கு பிடித்த குணங்கள் இந்த இரண்டு தான்- கில்க்றிஸ்ட் ஓபன் டாக்

- Advertisement -

நேற்று முடிந்த முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததை அடுத்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Dhoni

- Advertisement -

இந்தத் தொடரில் தோனி மெதுவாக விளையாடியது என்ற கருத்தினை முன்வைத்து பல விமர்சனங்கள் வந்தன. ஆனால் இதற்கு எதிர்மறையாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து பாராட்டி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் கில்க்ரிஸ்ட் கூறியதாவது : தோனி மிக சிறப்பான வீரர் அவரைப் போன்ற ஒரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கிடைப்பது மிகப்பெரிய விடயம். இனிமேல் இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் வந்தாலும் அவர்கள் தோனியை போன்று பெரிய வீரராக வருவார்களா என்பது சற்று சந்தேகம்தான்.

Dhoni

தோனியிடம் எனக்கு இரண்டு குணங்கள் மிகவும் பிடிக்கும். அந்த குணங்கள் யாதெனில் ஒன்று போட்டியின் போது எப்போதும் அமைதியாக இருப்பார். கடினமான சூழ்நிலையிலும் அந்த அமைதி மற்றும் பொறுமை அவரை முக்கியமான முடிவுகளை தெளிவாக எடுக்க வைக்கும். மேலும் இரண்டாவதாக அவருடைய தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடிக்கும். கண்டிப்பாக அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வோம் என்று நம்பிக்கையுடன் இறுதிவரை போராடுவார் அந்த தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கில்க்றிஸ்ட் பேட்டி அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement