இவர் பந்து போட வந்தாலே எனக்கு கை நடுங்கும்..! கில்கிரிஸ்ட்டை பயமுறுத்தியது யார் தெரியுமா..?

- Advertisement -

கிரிக்கெட்டில் அதிரடி வீரராக இருந்தாலும் குறிப்பிட்ட சில பந்துவீச்சாளர்கள் பந்துகளை எதிர்கொள்ள மிகவும் சிரமப்படுவார்கள். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஆடம் கில்கிரிஸ்ட் இலங்கை அணியின் சூழல் பந்து வீச்சாளர் முத்தைய்யா முரளிதரனின் பந்துவீச்சை கண்டு தான் அஞ்சினேன் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
adam
ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும் கேப்டனுமான ஆடம் கில்கிரிஸ்ட் ஆஸ்திரேலியா அணியின் ஒப்பற்ற வீரராக இருந்து வந்தார். அதிரடி பேட்ஸ்மேனாக இருந்து வந்த இவர், அந்த அணியின் ஒரு சிறந்த கீப்பராகவும் திகழ்ந்து வந்தார். தனது வாழ்வில் 287 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஆடம் கில்கிரிஸ்ட் 417 கேட்ச்களை பிடித்து ஒரு நாள் போட்டியில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி அடக்காரரான இவர் இதுவரை 96 டெஸ்ட் போட்டிகள் 287 போட்டிகள் ஒருநாள் போட்டிகள் மற்றும் 13 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இத்தகைய அனுபவமிக்க ஆட்டக்காரரான ஆடம் கில்கிரிஸ்ட் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசிய போது “இலங்கை வீரரான முரளிதரனின் பந்து வீச்சுக்குத்தான் நான் மிகவும் அஞ்சினேன். அவர் இரண்டு புறமும் பந்தை சுழலவிடுவார். அவரது பந்தை கணிக்க முடியாமல் நான் பல முறை திணறியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
murali
இலங்கை வீரரான முத்தைய்யா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றால் அதிக விக்கெட் வீழ்த்திய ஒரே வீரர் ஆவார். இதுவரை 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முத்தைய்யா முரளிதரன் 800 விக்கெட்டுகளை கைபற்றியுள்ளார். அதே போல 350 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 534 விக்கெட்டுகள் பெற்று ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை பெற்ற வீரர் என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement