டி20 கிரிக்கெட்டில் உலகின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான் – வித்தியாசமான வீரர்களை தேர்வு செய்த கிப்ஸ்

Gibbs
- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி துவக்க ஆட்டக்காரரான ஹெர்ஷல் கிப்ஸ் அந்த அணிக்கு கிடைத்த மிகத் திறமையான அதிரடி ஆட்டக்காரர். தனது வெடித்துச் சிதற கூடிய ஆட்டத்தை சர்வதேச கிரிக்கெட்டில் வெளிப்படுத்திய அவர் தென் ஆப்பிரிக்க அணிக்கு 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் 36 போட்டிகளில் 6 அரைசதத்தோடு 886 ரன்களை குவித்துள்ளார்.

Gibbs

- Advertisement -

இந்த காலத்தில் டி20 தொடர் அறிமுகமான பின்னர் பல வீரர்கள் அதிரடியாக ஆடுகின்றனர் ஆனால் அவர் விளையாடிய காலத்தில் ஒருநாள் போட்டியிலேயே டி20 போட்டி என்று அதிரடியாக விளையாடும் அபாரமான ஹிட்டிங் திறமையை கொண்டவர் கிப்ஸ். இந்நிலையில் தற்போது அடுத்த இரண்டு மாதங்களில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. அதற்கு முன்னர் தற்போது டி20 கிரிக்கெட்டில் தனக்கு பிடித்த சிறந்த பேட்ஸ்மேன்கள் குறித்து அவர் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களாக கிப்ஸ் 3 வீரர்களை தேர்வு செய்துள்ளார். அந்த மூன்று வீரர்கள் யாரெனில் : பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம், இந்திய அணி கேப்டன் விராத் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இவர்கள் மூவரையும் தேர்வு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Babar

டி20 கிரிக்கெட்டில் கோலி, பாபர் அசாம், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சிறந்த பேட்ஸ்மேன்களாக உள்ளனர். அதேபோல் பட்லரும் சிறப்பாக விளையாடுகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் பல வீரர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களுக்கும், பவர்ஹிட்டர் மற்றும் பினிஷர்களுக்கும் வித்தியாசம் உண்டு. டி20 கிரிக்கெட்டில் என்னைப் பொருத்தவரை கோலி, அசாம், ஸ்மித் ஆகியோர் சிறப்பாக விளையாடுகின்றனர்.

smith 1

ஏனெனில் இவர்கள் மூவரும் எந்த ஒரு சூழ்நிலையிலும், எந்த ஒரு தன்மையிலும், எந்த ஒரு மைதானத்திலும் ரன் குவிக்க கூடியவர்கள். அதுமட்டுமின்றி எப்பொழுதுமே மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடக்கூடிய எண்ணம் இருப்பது மட்டுமின்றி ரன்களை குவிக்க வேண்டிய ஆர்வம் உடையவர்கள். எனவே இவர்கள் மூவரையும் நான் சிறந்த டி20 பேட்ஸ்மேன்களாக தேர்வு செய்கிறேன் என கிப்ஸ் விளக்கத்தையும் அளித்துள்ளார்.

Advertisement