2வது டெஸ்டில் விலகிய தெ.ஆ வீரர்.. அப்படின்னா இந்தியாவுக்கு அதிர்ஷ்டமா? விவரம் இதோ

Gerald Coetzee
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. அதனால் 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா சொந்த மண்ணில் எங்களை அவ்வளவு எளிதில் வீழ்த்தி விட முடியாது என்பதை நிரூபித்துள்ளது.

மறுபுறம் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் அதற்கேற்றார் போல் விளையாடாத இந்தியா கொஞ்சம் கூட போராடாமல் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. குறிப்பாக தென் ஆப்பிரிக்கா 405 ரன்கள் அடித்த அதே பிட்ச்சில் இந்தியா ஒரு முறை கூட 300 ரன்கள் தாண்ட முடியாத அளவுக்கு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

- Advertisement -

விலகிய வீரர்:
அதனால் தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற மிகப்பெரிய கனவை நிஜமாக்க தவறிய இந்தியா குறைந்தபட்சம் தோல்வியை தவிர்த்து தொடரை சமன் செய்ய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 4ஆம் தேதி கேப்டன் நகரில் நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டியிலும் தற்போதுள்ள ஃபார்முக்கு இந்தியா வெற்றி பெறுவது மிகவும் கடினமாகவே பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து இளம் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்சி காயத்தால் விலகுவதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பாக இடுப்பு பகுதியில் ஏற்பட்ட வீக்கத்தின் காரணமாக 2வது போட்டியில் கோட்சி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது தென்னாபிரிக்க அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் சமீபத்தில் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக விக்கெட்டுகளை (2023இல் 20) எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் என்ற லன்ஸ் க்ளூஸ்னர் ஜாம்பவான் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார். அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு 5 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 போட்டிகளில் 10 விக்கெட்களை எடுத்து அசத்தி வருகிறார்.

இதையும் படிங்க: இப்போ சொல்லுங்க இந்தியாவுக்கு விளையாட ரெடியா இருக்கோம்.. சீனியர் வீரர்களின் பதிவை கலாய்க்கும் ரசிகர்கள்

எனவே தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் 2வது போட்டியில் விலகியுள்ளது இந்திய அணிக்கு சற்று அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தென்னாப்பிரிக்க வாரியம் அறிவிக்கவில்லை. அதனால் அவரை விட அனுபவமிகுந்த லுங்கி நிகிடி 2வது போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement