
ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இங்கிலாந்தை தோற்கடித்த ஆஸ்திரேலியா 2 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதையும் சேர்த்து ஆஸ்திரேலியாவில் கடைசியாக விளையாடிய 17 போட்டிகளில் இங்கிலாந்து 15 தோல்விகளை சந்தித்துள்ளது. 1 வெற்றியைக் கூட பெறவில்லை. இருப்பினும் இம்முறை பென் ஸ்டோக்ஸ் தலைமையில் பஸ்பால் அணுகுமுறையில் இங்கிலாந்து வெல்லும் என்று அந்நாட்டவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி அதற்குத் தகுந்தார் போல் விளையாடியதாக தெரியவில்லை. இந்நிலையில் தற்போதைய இங்கிலாந்து அணி வெளியில் இருப்பவர்கள் சொல்லும் நல்ல கருத்துக்களைக் கேட்டு விளையாடுவதில்லை என்று அந்நாட்டின் முன்னாள் கேப்டன் ஜெஃப்ரி பாய்காட் விமர்சித்துள்ளார். பேட்டிங், பவுலிங் துறைகளில் நிறைய தவறுகளுடன் விளையாடும் இங்கிலாந்து இப்படியே போனால் முட்டை கோப்பையை கூட வெல்ல முடியாது என்று அவர் சாடியுள்ளார்.
இது பற்றி ஜெப்ரி பாய்காட் தெரிவித்தது பின்வருமாறு. “ஆஷஸ் தொடரில் வெறும் 6 நாட்களில் தோற்றுள்ள இங்கிலாந்து கம்பேக் கொடுப்பதற்கு மிராக்கள் தேவைப்படுகிறது. காபாவில் நீங்கள் வெளிப்படுத்திய ஆட்டம் திகலாக இருந்தது. பொறுப்பற்ற முறையில் பேட்டிங் செய்த நீங்கள் அதிக குறுகலாக, அகலமாக அல்லது ஃபுல்லாக பந்து வீசினீர்கள். கேட்சுகளையும் தவற விட்டீர்கள்”
“இது போன்ற குறைவான பேட்டிங், பவுலிங்கை வைத்துக்கொண்டு ஆஷஸ் கோப்பையை விடுங்கள், முதலில் உங்களால் முட்டை கோப்பையைக் கூட வெல்ல முடியாது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் அவருடைய அணி சொல்வதை எங்களால் நம்ப முடியாது. அவர்கள் யாரும் வெளியில் இருப்பவர்களின் சத்தங்களைக் கேட்பது கிடையாது. மாறிவிட்ட நவீன டெஸ்ட் கிரிக்கெட்டை பற்றி தங்களுக்கு மட்டுமே தெரியும் என்று அவர்கள் நம்புகின்றார்கள்”
“கேப்டனிடமிருந்து அட்டாக் செய்ய வேண்டும் என்ற பேச்சும், பயிற்சியாளர் இடமிருந்து நம்பிக்கை வையுங்கள் என்ற பேச்சும் மட்டுமே நமக்கு கேட்கிறது. தலைமுறையில் ஒருமுறை வரக்கூடிய ஹாரி ப்ரூக் போன்ற திறமையான வீரரும் பேஸ்பாலை போல பேட்டிங் செய்து, ஒவ்வொரு பந்திலும் ரன்கள் எடுக்க ஓடுகிறார். இதுவரை ஒவ்வொரு கடினமான சூழ்நிலைகளிலும் ஹாரி தன்னுடைய அணியை கீழே விட்டுள்ளார்”
இதையும் படிங்க: 16க்கு 14 தோல்வி.. கபில் தேவின் மோசமான உலக சாதனையை தன் பெயரில் எழுதிய ஜோ ரூட்.. ஆஸியில் பரிதாபம்
“நீங்கள் பொதுவாக உங்களது விக்கெட்டுகளை கடினமாக விற்க வேண்டும். ஆனால் அதை எளிதாகக் கொடுக்கும் ஓலி போப் எப்போதும் ஏமாற்றத் தவறுவதில்லை” என்று கூறியுள்ளார் அதே போல ஜோப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ் ஆகியோர் பந்து வீச்சுத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் பாய்காட் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.