ஃட்ரான்ஸ்பார்மர் மாதிரி திறமையான.. பும்ரா ஆஸி மண்ணில் இந்த சவாலை சமாளிப்பாரா பாப்போம்.. ஃஜெப் லாசன்

Geoff lawson 2
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பர் மாதம் துவங்கியது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2018-19, 2020-21 ஆகிய அடுத்தடுத்த தொடர்களில் இந்தியா வெற்றி பெற்றது. அதனால் ஆஸ்திரேலிய மண்ணில் 2 டெஸ்ட் தொடர்களை வென்ற முதல் ஆசிய அணியாக இந்தியா வரலாறு படைத்தது.

அந்த வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது. இருப்பினும் இம்முறை இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெல்லும் என ரிக்கி பாண்டிங் போன்ற முன்னாள் வீரர்கள் கணித்துள்ளார்கள். இந்நிலையில் தங்கள் நாட்டில் ஜஸ்ப்ரித் பும்ரா மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜெப் லாசன் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

ட்ரான்ஸ்ஃபார்மர் மாதிரி:

குறிப்பாக 80களில் அசத்திய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களைப் போல பும்ராவை ஆஸ்திரேலிய ரசிகர்கள் வரவேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் 5 போட்டிகள் கொண்ட அந்த மெகா தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா முழுமையாக விளையாடுவது பெரிய சவாலாக இருக்கும் என்று லாசன் கூறியுள்ளார். இது பற்றி மிட்-டே இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“ஜஸ்ப்ரித் பும்ரா சி3பி0 மற்றும் ட்ரான்ஸ்ஃபார்மர் ஆப்டிமஸ் ப்ரைம் ஆகியவற்றுக்கு இடையேயானவர். அவரது பறந்த புன்னகை, முடிவில்லா ஆற்றல் மற்றும் தரமான யார்க்கரிலிருந்து பவுன்சர் ஆகியவற்றை நீங்கள் விரும்புவீர்கள். அவருடைய ஆக்சன் பேட்ஸ்மேன்கள் தங்களது லென்த் அல்லது சீம் பொசிஷனை மாற்றிக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கையை கொடுப்பதில்லை”

- Advertisement -

“அவருடைய சுருக்கமான ரன்-அப் சிறப்பாக செட்டிலாகி பேட்டிங் செய்வதற்கான இயல்பான நேரத்தையும் கொடுப்பதில்லை. ஆஸ்திரேலியாவில் குக்கும்புரா பந்தின் பயனை பயன்படுத்துவது பும்ரா அல்லது எந்த வேகப்பந்து வீச்சாளருக்கும் சவாலாக இருக்கும். ஒருவேளை பிட்ச்கள் காய்ந்து கடினமாக இருந்தால் அவரால் தாமதமாக இல்லையென்றாலும் விரைவாக ரிவர்ஸ் ஸ்விங்கை பெற முடியும்”

பும்ராவின் சவால்:

“ஆஸ்திரேலியாவில் வேகப்பந்து வீச்சு தான் வெற்றிக்கான சாவியாகும். அதே சமயம் பழைய பந்தை பயன்படுத்தும் திறன் மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் ஆகியவையும் முக்கிய பங்காற்றும். பும்ரா போன்ற அனைத்து பவுலர்களுக்கும் இந்த 5 போட்டிகளில் உடலை நிர்வகிப்பது சவாலாக இருக்கும். ஒருவேளை குறுகிய ஸ்பெல்லை வீசி ஸ்பின்னர்கள் நிறைய ஓவர்கள் வீசினால் அவரால் முழுமையாக விளையாட முடியும்”

இதையும் படிங்க: 90,000 ரூபாய்.. கல்லூரி மாணவன் என்று சொல்லி ரிஷப் பண்ட்டை ஏமாற்றிய நபர்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்

“ஆஸ்திரேலிய ரசிகர்கள் பும்ராவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் விரும்பக்கூடிய போட்டியாளராக அவரைப் பார்ப்பார்கள். குறிப்பாக 1980களில் ஆஸ்திரேலியாவுக்கு வந்த வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களைப் போல் அவரை ரசிகர்கள் நடத்துவார்கள்” என்று கூறினார். முன்னதாக ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவதற்காகவே தற்போது பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement