ஆரம்பித்த இடத்திலேயே முடிக்க நினைக்கும் கெயில். அவர் கோரிக்கையும் சரியாதான் இருக்கு – விவரம் இதோ

gayle

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 21ம் தேதி மும்பையில் அறிவிக்கப்பட்டது.

gayle

இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மூன்று வடிவ கிரிக்கெட் இருக்கும் மீண்டும் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த தொடருக்கான ஒருநாள் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்ட்டுள்ளது.

- Advertisement -

அதில் உலகக்கோப்பை தொடரில் சரியாக விளையாடாத மற்றும் உடற்தகுதியிலும் சரிவர இல்லாத கெயில் அணிக்கு தேர்வாகி உள்ளார். உலகக்கோப்பை முடிந்து ஓய்வு பெறுவேன் என்று அறிவித்த கெயில் மீண்டும் இந்திய தொடரில் விளையாடுவேன் என்று கூறியதால் இந்த தொடரோடு ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது.

chris-gayle

ஏனெனில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அணிக்கு எதிராக 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அறிமுகமாகிய கெயில் அதேபோன்று இந்திய அணிக்கு எதிராக விடைபெற இருப்பதாக திட்டம் வகுத்து இருப்பதாக தெரிகிறது. எனவே இந்த தொடரோடு அவர் ஓய்வினை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கெயில் இதுவரை 298 போட்டிகளில் விளையாடி 10393 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement