- Advertisement -
உலக கிரிக்கெட்

AUS vs WI : அம்பயர்களின் கவனக்குறைவால் தேவையில்லாமல் அவுட் ஆகி வெளியேறிய – வெஸ்ட் இண்டீஸ் வீரர்

உலகக் கோப்பை தொடரின் பத்தாவது போட்டி நேற்று நாட்டிங்ஹாம் நகரத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குல்டர் 92 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்களையும் அடித்தனர்.

- Advertisement -

பின்னர் 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 273 ரன்கள் மட்டுமே எடுத்தது இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் சார்பாக மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக பந்து வீசி 10 ஓவர்களில் 46 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்நிலையில் நேற்று கெயில் அவுட்டான விதம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் நேற்று நடுவர்கள் கெயில் விளையாடும் பொழுது அவரை அவுட்டாக்கும் எண்ணத்திலேயே செயல்பட்டது போன்று தெரிகிறது. அதன் காரணம் யாதெனில் கெயில் பேட்டிங் செய்த போது அடுத்தடுத்து இரண்டு எல்பிடபிள்யூ கொடுத்தனர். ஆனால் ரிவ்யூ மூலம் இரண்டு முறையும் கெயில் அவுட் இல்லை என்று தெரிய வந்தது.

அதேபோன்று ஐந்தாவது ஓவரில் விளையாடிக்கொண்டிருந்த கெயில் ஐந்தாவது பந்தில் ஸ்டார்க் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ மூலம் அவுட்டாகி வெளியேறினார். ஆனால் அதற்கு முந்திய நான்காவது பந்தில் ஸ்டார்க் மிகப்பெரிய நோபால் ஒன்றினை வீசினார். இதனை அம்பயர் கவனிக்கவில்லை அப்படி அம்பயர் கவனித்திருந்தால் அவர் அவுட் ஆன பந்து ப்ரீஹிட்டாக அமைந்திருக்கும் எனவே அவர் அந்த பந்தில் அவுட் ஆகி இருக்க வாய்ப்பில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. எனவே இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது

- Advertisement -
Published by