இந்திய அணியில் இவங்க 2 பேரும் கொஞ்சமும் பயமில்லாமல் பேட்டிங் பண்றாங்க – கங்குலி வெளிப்படை

Ganguly

நவீன இந்திய கிரிக்கெட் அணியை குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலி, தற்பொழுது இல்லை இந்திய அணி மிகவும் அபாரமான முறையில் அனைத்து போட்டிகளிலும் விளையாடி வருகிறது. இந்திய அணியில் எல்லா வகையிலும் கிரிக்கெட் வீரர்கள் செட் ஆகி விட்டனர். மேலும் பேசிய கங்குலி, 1-2 வீரரை மட்டும் சார்ந்து இல்லாமல் அனைத்து வீரர்களும் தங்கள் பணியை மிக சரியாக செய்து வருகின்றனர் இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும் என்று கூறியுள்ளார்.

ind

மேலும் பேசிய கங்குலி, தற்போது இல்லை இந்திய அணியில் விளையாடும் வீரர்களை தவிர்த்து வெளியே இருக்கும் வீரர்களும் அனைத்து வகையிலும் தகுதியான வீரர்களாக இருக்கின்றனர். ஒரு வீரருக்கு மாற்று வீரராக அனைத்து இடங்களிலும் ஆடும் அளவுக்கு இந்திய அணி நிர்வாகம் சிறந்த வீரர்களை செட் செய்து விட்டது. இதற்கு முழு காரணமும் ஐபிஎல் லீக் தொரையே சேரும். ஐபிஎல் லீக் தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இளம் வீரர்களை பெற்றுவிடுகின்றனர்.

இந்திய அணியிலும் வந்து தங்களது முழு பங்களிப்பு தருவதன் மூலம் இந்திய அணி சமீப காலங்களாக வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் போன்ற ஒருசில பேட்ஸ்மேன்களும் மேலும் ஒரு சில பவுலர்களும் பயமே இல்லாமல் விளையாடி வருகின்றனர். இது மிகமிக தேவை, அப்படி ஆடும் பட்சத்தில் எதிரணியினர் இந்திய அணியை கட்டுக்குள் கொண்டுவர நேரம் எடுக்கும்.

pant 1

எனவே தேவைப்படும் நேரங்களில் அதிரடியாக ஆடி எதிரணியை நெருக்கடிக்கு உள்ளாக்குவது ஒரு சிறந்த உத்தியாக பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் நாங்கள் விளையாடும் காலங்களில் குறிப்பாக டெஸ்ட் போட்டி விளையாட போகிறோம் என்றால் ஏழு மணி வந்துவிட்டாலே எங்களுக்குள் பயம் வந்துவிடும். என்னதான் முழுமையாக தயார் ஆகி விட்டாலும் எங்களுக்குள் அந்த பயம் எப்படியாவது எட்டி பார்த்து விடும்.

- Advertisement -

pandya 2

அந்த பயத்தை எங்களுக்கு பலவீனமாக நாங்கள் பார்க்காமல் அதை பலமாக நாங்கள் பார்த்தோம். ஏனெனில் ஒரு பயம் எழும் பொழுது தான் அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்த செய்திகள் நமக்கு தோன்ற ஆரம்பிக்கும் என்று இறுதியாக கூறி முடித்தார்.