ராஞ்சி மைதானத்திற்கு தோனியோட பெயரை வையுங்கள். விமர்சையாக வேண்டுகோளை முன் வைத்த – கவாஸ்கர்

Gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்து வருகிறது. இந்த போட்டியை வர்ணனை செய்யும் பணியை இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் செய்து வருகிறார்.

Dhoni-1

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியில் கவாஸ்கர் வர்ணனை செய்து கொண்டிருக்கும்போது ராஞ்சி நகரையும், ஜார்கண்ட் மாநிலத்தையும் கிரிக்கெட் வரைபடத்தில் கொண்டு வந்து பெருமை சேர்த்தவர் தோனிதான். அம்மாநிலத்தின் புகழ்பெற்ற வீரரான தோனியே ராஞ்சி நகரின் அடையாளம்.

கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்து இருக்கும் தோனி அந்த மைதானத்தின் பயிற்சியிலேயே இந்திய அணிக்கு கிடைத்தார் எனவே ராஞ்சி கிரிக்கெட் மைதானத்திற்கு தோனியின் பெயரை வைப்பது மிகப் பொருத்தமானதாக இருக்கும். அதற்கு அவர் தகுதியானவர் என்று கவாஸ்கர் வர்ணனை செய்தார்.

Dhoni-2

மேலும் ஏற்கனவே ராஞ்சி மைதானத்தின் ஒரு பெவிலியனுக்கு எம்எஸ் தோனி பெவிலியன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு பெவிலியனுக்கு மட்டுமல்ல மொத்த ஸ்டேடியத்திற்கும் தோனியின் பெயரை வைக்க வேண்டும் என்று கவாஸ்கர் ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு வித்தியாசமான முறையில் தனது வேண்டுகோளை வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement