கடந்த நவ்.17ம் தேதி இந்தியா – ஆஸ்திரேலியா இடையில் பகலிரவு போட்டியாக நடந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வியை பெற்றது. முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியும் முதல் இன்னிங்சில் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 53 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களை மட்டும் எடுத்திருந்தது.
இதானால் 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் இந்த படுமோசமான தோல்வியை கண்டு பலரும் விமர்சித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் தொடக்க வீரரான பிரித்திவி ஷாவை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கொந்தளித்துள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர் பிரித்திவி ஷா, முதல் இன்னிங்சில் டக்-அவுடாகினார். இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். பிரித்திவி ஷாவின் பேட்டிங்கில் பிரச்சினை இருப்பதை கண்டறிந்த ஆஸ்திரேலிய வீரர்கள் அதற்கேற்றவாறு பந்துவீச்சி எளிதாக விக்கெட்டை வீழ்த்தினர். இவர் பயிற்சி டெஸ்ட் போட்டியிலும் தனது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
பயிற்சி டெஸ்ட் போட்டியில் பிரித்திவி ஷா 0,19,40,3 என்று மோசமான ரன்களை குவித்து இருந்தார். இருப்பினும், பகலிரவு டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுல், சுப்மன் கில் போன்ற தொடக்க வீரர்களை நீக்கிவிட்டு, பிரித்திவி ஷாவிற்கு இடம் கிடைத்தது. பயிற்சி டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் 0,29,43, 65 ரன்கள் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இருப்பினும் சுப்மன் கில் நீக்கிவிட்டு, பிரித்திவி ஷாவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில், சுனில் கவாஸ்கர் பிரித்திவி ஷா குறித்து கூறிய கருத்தை கிரிக்கெட் விமர்சகர் குப்தா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதில் “பிரித்திவி ஷா பேட்டிங் மோசமாக உள்ளது. அதுமட்டுமின்றி அவரது பேட்டியில் பல பிரச்சினைகள் இருக்கிறது. எனவே மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டியில் அவரை தொடரில் இருந்து நீக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்ததை” குப்தா பெட் செய்துள்ளார்.