முதல் டெஸ்ட் : ரோஹித் சர்மாவோடு இவரே துவக்க வீரராக விளையாட வேண்டும் – கவாஸ்கர் கருத்து

Gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று ஆகஸ்ட் 4ஆம் தேதி மாலை மூன்று முப்பது மணிக்கு நாட்டிங்காம் நகரில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் பயிற்சியை முடித்து தற்போது தயாராக இருக்கும் நிலையில் இரு அணிகளிலும் எந்தெந்த வீரர்கள் விளையாடுவார்கள் ? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

INDvsENG 1

- Advertisement -

ஏற்கனவே பல முன்னாள் வீரர்கள், நிபுணர்கள், பிரபலங்கள் என பலரும் இந்திய அணிக்காக யார் ? யார் ? விளையாட வேண்டும் என்று கருத்து தெரிவித்து வரும் வேளையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யார் களம் இறங்க வேண்டும் என்பது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த இங்கிலாந்து தொடரில் ரோகித் சர்மா உடன் இணைந்து ராகுல் நிச்சயம் துவக்க வீரராக களமிறங்க வேண்டும். ஏனெனில் 2019 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக துவக்க வீரராக அறிமுகமாகிய அகர்வால் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி இருந்தாலும் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து சற்று திணறி வருகிறார். இதன் காரணமாக அவரை விட தற்போது நல்ல பார்மில் இருக்கும் கே.எல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவதே இந்திய அணிக்கு நல்லது.

Rahul

ஏனெனில் ராகுல் ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் சதம் விளாசியது மட்டுமின்றி சூழ்நிலைக்கு ஏற்ப அவரால் அடித்தும் விளையாட முடியும், அமைதியாக ரன்களை அதிகரித்தும் விளையாட முடியும். அவரிடம் ரன் குவிப்பை கட்டமைக்கும் திறமை உள்ளதால் நிச்சயம் அவரே ரோகித் சர்மாவுடன் களம் இறங்க வேண்டும் அதுதான் இந்திய அணிக்கு நல்லது என கவாஸ்கர் தனது கருத்தை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Rahul

ஏற்கனவே இந்த தொடரில் இடம் பெற்றிருந்த துவக்க வீரர் கில் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் அகர்வால் தான் தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அகர்வாலும் பயிற்சியின்போது சிராஜ் வீசிய பந்தில் தலையில் அடிபட்டு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ராகுல் இன்றைய போட்டியில் விளையாடுவது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement