இவரோட பவுலிங் சிறப்பாக இருக்கிறது. கொஞ்சம் ட்ரைனிங் கொடுத்தா பும்ரா மாதிரி ஆக்கிடலாம் – கவாஸ்கர் நம்பிக்கை

Sunil-gavaskar

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இங்கிலாந்து அணியை வொயிட்வாஷ் செய்தது. இந்த தொடரில் இந்திய அணிக்காக பல இளம்வீரர்கள் அறிமுகமாகியுள்ளனர். அப்படி அறிமுகமான அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர்.

trophy

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கிய பிரசித் கிருஷ்ணா மிக அபாரமாக பந்து வீசிய அனைவரது கவனத்தையும் பெற்று உள்ளார். மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள பிரசித் கிருஷ்ணா மொத்தமாக 151 பந்துகளை வீசி இருக்கிறார். அதில் 177 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புது பந்தில் சரியாக வீசாத போதிலும் ஆட்டம் போகப்போக மிக அற்புதமாக பந்துவீசி முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த தொடர் முழுவதும் நல்ல பெயரை பெற்று உள்ளார்.

இந்நிலையில் பிரசித் கிருஷ்ணாவை டெஸ்ட் போட்டிகளிலும் ஆட வைக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய சுனில் கவாஸ்கர் : பிரசித் கிருஷ்ணா மிக அற்புதமாக பந்து வீசுகிறார். அவரது வேகம் மிக அபாரமாக இருக்கிறது.அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் ,பென் ஸ்டோக்ஸ் , சாம் பில்லிங்ஸ் போன்ற முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். இது ஒரு அறிமுக தொடரில் மிகப் பெரிய விஷயமாகவே நான் பார்க்கிறேன்.

prasidh-krishna

எனவே பிரசித் கிருஷ்ணாவை நன்கு தயார் படுத்தி ஜஸ்பிரித் பும்ராவைப் போல ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டிகளிலும் கிருஷ்ணாவை ஆட வைக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடத்தில் பேசிய பிரசித் கிருஷ்ணா :

- Advertisement -

prasidh krishna 1

இந்த தொடர் முழுவதும் புதிய பந்தில் நான் வீசிய பந்துகள் அனைத்தும் மிகவும் மோசமாக இருக்கிறது அதை ஒத்துக் கொள்வேன். மிக தவறான லைனில் பந்து போட்டதை அடுத்து நான் அதிக ரன்களை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். இதை நான் வருகிற காலங்களில் சரி செய்து ஆரம்பம் முதலே நன்றாக பந்துவீச முயற்சிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.