டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் : இவங்க 2 பேரும் நிச்சயம் சேர்ந்து விளையாடனும் – சுனில் கவாஸ்கர் கருத்து

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி நாளை சவுத்தாம்ப்டன் நகரின் ஏஜஸ் பவுல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த இறுதிப் போட்டியில் விளையாடும் பிளேயிங் லெவன் அணி குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

INDvsNZ

- Advertisement -

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்த இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய வீரர்கள் குறித்து தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கடந்த சில நாட்களாகவே சவுத்டாம்பன் நகரில் வெயில் அதிகமாக காணப்படுகிறது.

இதன் காரணமாக மைதானம் நன்றாக காய்ந்து வருகிறது. அதனால் இந்திய அணி இறுதிப்போட்டியில் மூன்று சுழற்பந்து 3 வேகப்பந்து வீச்சாளர்கள், மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடினால் அது நன்றாகவே ஈடுபடும். எனவே இந்த இறுதிப் போட்டியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் ஒன்றாக இணைந்து விளையாட வேண்டும்.

jadeja

அவர்கள் இருவரும் பந்துவீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அணிக்கு பலத்தை சேர்ப்பார்கள் அதனால் அவர்களை அணியில் இணைக்கும் வேளையில் இந்திய அணி முழுமையானதாக இருக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : பயிற்சி போட்டியில் விளையாடாத இந்திய அணி இரு அணிகளாக பிரிந்து தங்களுக்குள் விளையாடியது நல்ல விஷயம் என்று கவாஸ்கர் கூறினார்.

Ashwin

இந்த இறுதிப்போட்டியில் சுனில் கவாஸ்கர் மற்றும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோர் வர்ணனையாளராக செயல்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement