டிராவில் முடிவதெல்லாம் ஏத்துக்கவே முடியாது. வெற்றியாளரை தேர்வு செய்ய ஏதாவது பண்ணுங்க – கவாஸ்கர் காட்டம்

Gavaskar
- Advertisement -

ஏஜஸ் பவுல் மைதானத்தில் தற்போது ஐசிசி நடத்தி வரும் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முக்கியமான இந்த போட்டி மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் 6-வது நாளான இன்று போட்டி ரிசர்வ் டேவில் நடைபெற்றாலும் இப்போட்டியானது டிராவில் முடியவே அதிக வாய்ப்பு உள்ளது.

WTC

- Advertisement -

இதன் காரணமாக ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், நிபுணர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் கடந்த பல தொடர்களாக அனைத்து அணிகளும் கடுமையான போட்டி அளித்து தற்போது இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்த தொடரில் வெற்றி தோல்வி முடிவாகவில்லை என்றால் அது வேதனைக்குரிய ஒரு விஷயம் என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த இறுதிப் போட்டி டிராவில் முடிவடைவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி டிராவில் முடிந்தால் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். உலக கோப்பையில் இது போன்று இரு அணிகளும் வெற்றியாளர்களாக கோப்பையை பகிர்ந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.

IND

கால்பந்து விளையாட்டில் ஆட்டம் சமனில் முடிந்தால் வெற்றியாளரை தேர்வு செய்ய பெனால்டி முறை கடைபிடிக்கப்படுகிறது. அதேபோன்று டென்னிஸ் போட்டியில் 5 செட் மற்றும் டைபிரேக்கர் முறை கொண்டுவரப்பட்டது. இதேபோல் வருங்காலத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் டிராவில் முடிவடைந்தால் இரு அணிகளில் ஒன்றை வெற்றியாளராக அறிவிக்க சரியான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் என ஐசிசி-க்கு வேண்டுகோள் வைத்து கவாஸ்கர் தனது காட்டமான கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

kohli rahane

ஏற்கனவே ஐசிசி தெரிவித்துள்ள அறிக்கையில் இந்த இறுதிப் போட்டியானது டிராவில் முடிவடைந்தது என்றால் இரு அணிகளும் வெற்றி பெற்ற அணிக்கு அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement