காயம் என்று சாக்கு போக்கு சொல்லவேண்டாம். ரோஹித் விஷயத்தில் என்ன நடந்தது – கவாஸ்கர் காட்டம்

Gavaskar

இந்திய அணி வீரர்கள் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் ஐபிஎல் தொடரை முடித்த கையோடு அப்படியே ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு விடுவார்கள். மேலும் ஆஸ்திரேலிய செல்லும் இந்திய வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் ஆஸ்திரேலியாவில் 14 தனிமைப்படுத்த படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

INDvsAUS

ஆஸ்திரேலியாவில் வரும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட ஒரு மிக நீண்ட தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான அணியும் சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இதில் அணியின் ஆஸ்தான துவக்க வீரராக இருக்கும் ரோஹித் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை.

ஏனெனில் கடந்த மூன்று போட்டிகளாக மும்பை இந்தியன்ஸ் அணி ஆடும் போட்டிகளில் எல்லாம் கெரோன் பொல்லார்ட் கேப்டனாக இருக்கிறார். ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுவிட்டது என்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்தது . ஆனால் அது எந்த வகையான காயம் என்று அவர்கள் கூறவில்லை. இதனைக் கருத்தில் கொண்ட பிசிசிஐ அவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் சேர்க்கவில்லை.

Rohith-4

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் ரோகித் சர்மாவிற்கு என்ன ஆனது எப்படிப்பட்ட காயமானது அப்படி காயமாகி இருந்தால் அவர் எப்படி மீண்டும் பயிற்சி செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்…

- Advertisement -

rohith 1

ரோகித் சர்மாவிற்கு உண்மையில் என்னதான் ஆகியிருக்கிறது. ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியின் அவரது பெயர் இடம் பெறவில்லை. ஏனெனில் அவருக்கு காயம் ஆகிவிட்டது என்று மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்திருக்கிறது. ஆனால் எப்படிப்பட்ட காயம் என்று தற்போது வரை யாருக்கும் தெரியாது உண்மையை சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார் சுனில் கவாஸ்கர்.