தோனியை பிடித்து தள்ளும் முன் அவரே ஒதுங்கினால் நல்லது. தோனி ஓய்வு குறித்து – கவாஸ்கர் பேட்டி

Gavaskar
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் இடம் பிடிப்பது சற்று சிரமமாக உள்ளது. மேலும் அவரது ஓய்வு குறித்த பேச்சும் தொடர்ந்து இருந்து வரும் நிலையில் தோனி ஓய்வு குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

Dhoni

- Advertisement -

தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வரும் தோனி தானாக முன்வந்து ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று பலரும் கூறி வந்த நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஜாம்பவானான கவாஸ்கர் தோனி ஓய்வு குறித்து தனது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

தோனிக்கு தற்போது 38 வயதாகிறது அடுத்த வருடம் டி20 உலக கோப்பையில் அவருக்கு 39 வயது ஆகி விடும். எனவே தோனி ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்று நான் நினைக்கிறேன். அவர் மிகச்சிறந்த வீரர் உலக அளவில் அவருக்கு இருக்கும் ரசிகர்களில் நானும் ஒரு ரசிகன் தான். அவருடைய பேட்டிங், கேப்டன்ஷிப் மற்றும் களத்தில் அவர் செய்யும் அனைத்து விடயங்களும் எனக்கு பிடிக்கும். இருப்பினும் அவர்கள் அவர் ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்.

Dhoni

எனவே தேர்வு குழுவினர் அவரை ஒதுக்கும் முன் தானாக முன்வந்து தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிட்டால் தோனிக்கு நல்லதாக இருக்கும் என்றும் இருப்பினும் தோனி மனதில் இருப்பது அவருக்கு மட்டுமே தெரியும் என்று கவாஸ்கர் கூறினார். தோனி குறித்து பலரும் கருத்துக்களை கூறிவரும் நிலையில் தோனி இன்று வரை தனது ஓய்வு அறிவிப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement