யாரை வேணும்னா சேருங்க. ஆனா இவரை மட்டும் அணியில் இருந்து நீக்கிடாதீங்க – கவாஸ்கர் வேண்டுகோள்

gavaskar
- Advertisement -

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாட ஆரம்பித்ததிலிருந்து இருந்து அணிக்குள் பல மாற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பார்க்கப்போனால் முதல் டெஸ்ட் போட்டியுடன் தனது குழந்தை பிறப்புகாக கோலி நாடு திரும்பி விட்டார். அதே வேளையில் எதிர்பாராவிதமாக முதல் போட்டியின் போது பேட்டிங் செய்து கொண்டிருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷமி கையில் அடிபட்டு இத்தொடரில் இருந்து முற்றிலும் விலகி விட்டார்.

Shami 2

- Advertisement -

அவருக்கு பதிலாக முகமது சிராஜ் இரண்டாவது போட்டியின் போது சேர்க்கப்பட்டார். ஏற்கனவே இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடாத ரோகித் சர்மாவும் டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டார். ஆனால் முதல் இரு போட்டிகளில் விளையாடவில்லை. அதேபோன்று காயம் காரணமாக இஷாந்த் சர்மாவும் இத்தொடரில் பங்கேற்கவில்லை மேலும் தற்போது 2வது டெஸ்ட் போட்டியின் போது உமேஷ் யாதவ் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டு இத் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இப்படி அடுத்தடுத்து வீரர்களின் காயம் மற்றும் விலகல் என இந்திய அணிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் முதல் 2 போட்டிகளிலும் நிறைய வீரர்கள் மாற்றப்பட்டு விட்டனர் குறிப்பாக முதல் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய பிரித்திவி ஷாவிற்கு பதிலாக அறிமுக வீரராக கில் இரண்டாவது போட்டியில் விளையாடினார். மேலும் விக்கெட் கீப்பர் சஹாவிற்கு பதிலாக ரிஷப் பண்ட் இரண்டாவது போட்டியில் விளையாடினார். இப்படி இத்தொடரில் ஏகப்பட்ட வீரர்கள் மாற்றம் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

umesh

இந்நிலையில் எந்த மாற்றங்கள் நடந்தாலும் முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பினாலும் கூட மாயங்க் அகர்வால் இந்திய அணியில் இருந்து நீக்கக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் தனது வேண்டுகோளை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மா அணிக்குள் மீண்டும் இணைவது மகிழ்ச்சியான ஒரு விடயம் தான். அது இந்திய அணிக்கு பலத்தையே தரும், இருந்தாலும் அகர்வாலை இந்த போட்டியில் இருந்து மூன்றாவது போட்டியில் இருந்து நீக்கக் கூடாது.

Agarwal-2

ஏனெனில் அகர்வால் துவக்க வீரராக நல்ல ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி உள்ளார். கில் அப்படி இல்லை ஒரு போட்டியில் மட்டுமே அவர் துவக்க வீரராக விளையாடியுள்ளார். மற்றபடி அவர் மிடில் ஆர்டரில் விளையாடி பழக்கப்பட்டவர் எனவே ரோஹித் அணிக்குள் வந்தாலும் அவரையும் அகர்வாலையும் துவக்க வீரராக விளையாட வைத்து விஹாரிக்கு பதிலாக மிடில் ஆர்டரில் கில்லை விளையாட வைக்கலாம் என்பதே என்னுடைய கருத்து என கவஸ்கர் தெளிவாக எடுத்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement